நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 


டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. 


மூன்றாவது ஒரு நாள் திருவனந்தபுரத்தில் நேற்று நடைப்பெற்றது. மழை காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.


டாஸ் போடுவதற்கு முன்பாக கனமழை கொட்டியதால் மைதானத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியதை அடுத்து, ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், 8 ஓவர்கள் கொண்டதாக போட்டி நடத்தப்பட்டது. 


இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 17 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்தனர். டிம் சவத்தி, ஈஷ்வர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.


பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. வெற்றிக்காக போராடிய கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.