)
இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் திடீரென அவசர அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய வீரர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு சென்றுள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில், லண்டனுக்கு ஏன் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் சிகிச்சை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருநெது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் தகவலின் படி, சூர்யகுமார் யாதவ் இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைய ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
தற்போது வெள்ளை பந்து போட்டிகள் ஏதும் இல்லாததால், சூர்யகுமார் யாதவுக்கு உடற்தகுதி மீது கவனம் செலுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தான் வங்கதேசம் சென்று டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதன்பின், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாட உள்ளது.
சூர்யகுமார் யாதவ் தனது உடற்தகுதியை மீட்டெடுத்து வர இருக்கும் 2026 டி20 உலக கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 இன்னிங்ஸில் விளையாடி, 717 ரன்கள் விளாசினார். இதில் 5 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்டரைக் ரேட் 167.91ஆகவும் சராசரி 65.18ஆகவும் இருந்தது. மேலும், 16 போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் எடுத்து டி20களில் தொடர்ச்சியாக 25 ரன்களுக்கு எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ