IPL 2020: CSK வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!! காரணம் என்ன?
ஐபிஎல் 2020 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார்.
Cricket News: ஐபிஎல் 2020 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) விலகியுள்ளார். அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஏற்கனவே அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விலகிய நிலையில் தற்போது பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளார்.
மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களால் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 இல் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஹர்பஜன் தனது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே - CSK) க்கு வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்ற சி.எஸ்.கே முகாமில் இருந்து இரண்டாவது கிரிக்கெட் வீரர் இவர். சென்னை அணியுடன் யுஏஇக்கு (UAE) பயணம் செய்த பின்னர் ரெய்னா வீடு திரும்பியிருக்கும் நிலையில், ஹர்பஜன் சில தனிப்பட்ட காரணங்களால் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார்.
ALSO READ:
‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை: ஹர்பஜன் சிங் பதிலடி
#தெறிக்கவிடலாமா அஜித் பாணியில் ட்விட் செய்த சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங்
கடந்த வார இறுதியில் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா (Suresh Raina) வெளியேறியது அவரது தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறப்பட்டாலும், தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவரது சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதாக சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.