இந்தியாவில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளை பிசிசிஐ ஏற்கனவே ஒத்திவைத்துள்ளது.  பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலமும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.  ஏலத்தை ஒத்திவைக்கும் முடிவு கோவிட்ன் காரணமாக இல்லை எனவும், அமெரிக்க நிறுவனமான CVC மற்றும் அகமதாபாத் அணி உரிமை இடையே பிரச்னைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Ind vs SA: 2வது டெஸ்ட் தோல்விக்கு யார் காரணம்? ராகுல் டிராவிட் சொல்வது என்ன?


புதிய அணியின் ஒப்பந்தம் மற்றும் இரு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் கருத்து மோதல்களை சரி செய்ய சட்ட வல்லுநர்களின் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  கூடிய விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தாலும் ஏலம் நடைபெற தாமதம் ஆகும் என்றே தெரிகிறது.  தற்போது இந்தியாவில் மூன்றாம் அலை வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் உள்ளூர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 (ipl2022) போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளை போல இந்த வருடம் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகளை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை.  அதற்கு பதிலாக மும்பையில் அனைத்து போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது.  



இந்த வருடம் 8 அணிகளை தவிர புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளது.  இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் 8 அணிகளும் 3 முதல் 4 வீரர்களை அணியில் தக்கவைத்து உள்ளனர்.


தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்): ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)


மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)


டெல்லி கேபிடல்ஸ் (டிசி): ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, பர்ஸில் இருந்து 8 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)


ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்): சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)


பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்): மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)


ALSO READ | ரிஷப் பந்தின் ஆட்டம் குறித்து அவரிடம் பேசவுள்ளோம் - ராகுல் டிராவிட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR