ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார்?

Bowler Winning Purple Cup: ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு தொடரிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். 

Written by - R Balaji | Last Updated : Mar 13, 2025, 07:01 PM IST
  • ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 தொடங்குகிறது
  • இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் கேப் வென்ற பவுலர்கள் குறித்து பார்க்கலாம்
ஐபிஎல் வரலாற்றில் பர்பிள் நிற கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார்?

IPL 2025: சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களுக்கு எப்படி ஆரஞ்சு கேப் வழங்கப்படுகிறதோ, அதேபோல் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களுக்கும் பர்பிள் கேப் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு சீசனிலும் அந்த பர்பிள் கேப்பை வென்ற பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

2008 ஆம் ஆண்டுதான் ஐபிஎல் சீசன் தொடங்கியது. முதல் சீசனிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சொகையல் தன்வீர் 22 வீக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற கேப்பை வென்றார். 2009 ஆம் ஆண்டு அதாவது இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜ்ஸ் அணியை சேர்ந்த ஆர் பி சிங் 23 விக்கெட்களை வீழ்த்தி அவர் பர்பிள் நிற கேப்பை வென்றார். 

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் டெக்கான் சார்ஸ் அணியை சேர்ந்த பிரக்யான் ஒஜா அதிக விக்கெட்களை கைப்பற்றி இந்த விருதை பெற்றார். 2011 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த லசித் மலிங்காவும், 2012 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய மோர்னே மோர்க்கலும் பர்பிள் கேப்பை பெற்றனர். மோர்னே மோர்க்கல் 25 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 

மேலும் படிங்க: ஜோஸ் பட்லர் நீக்கம்.. ஐபிஎல் விதியில் இதை மாற்றலாம் - சஞ்சு சாம்சன் ஆதங்கம்!

பின்னர் 2013ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பிராவோ 32 விக்கெட்களை பெற்று பர்பிள் கேப்பை வென்றார். தற்போது வரை இவர் எடுத்த இந்த 32 விக்கெட்களே ஒரு சீசனில் ஒரு பவுலரால் எடுக்கப்பட்ட அதிகபட்சமாக இருக்கிறது. 2014ஆ,ம் ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் மோகித் சர்மா பர்பிள் கேப்பை வென்றார். 2015ஆம் ஆண்டு மீண்டும் பிராவோவே பர்பிள் நிற கேப்பை பெற்றார். இதன் மூலம் பிராவோ முதல் முறையாக இரண்டு முறை பர்பிள் கேப் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் அணிக்காக பர்பிள் கேப்பை வென்றார். பிரோவோக்கு அடுத்தபடியாக இவர் இரண்டு முறை அந்த கேப்பை பெற்றார். 2018ஆம் ஆண்டி பஞ்சாப் அணியின் ஆண்டிரூ டை, 2019ஆம் ஆண்டில் சென்னை அணியின் இம்ரான் தாகிர் பர்பிள் கேப்பை பெற்றனர். 202ஆம் ஆண்டில் டெல்லி அணியின் பவுலர் ரபாடா 30 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். 

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஹர்சல் பட்டேல் ஆர்சிபி அணிக்காகவும் பஞ்சாப் அணிக்காகவும் பர்பிள் கேப்பை பெற்றார். 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக சாஹல் 27 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். 2023ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக முகமது ஷமி 28 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். 

மேலும் படிங்க: இந்தியா சொல்வதையெல்லாம் செய்வீங்களா? ஐசிசி மீது காட்டமான விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News