IPL 2025 CSK, Batting Order: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2025 ஐபிஎல் சீசனை பெரியளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் எனலாம். கடந்த முறை நூலிழையில் பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது. இந்த முறை அதன் ஆதிக்கத்தை தொடர வேண்டிய முனைப்பில் சிஎஸ்கே நிச்சயம் இருக்கும்.
IPL 2025 CSK: பலமாக தோற்றமளிக்கும் சிஎஸ்கே அணி
தோனி (MS Dhoni) மற்றுமொரு சீசனை விளையாடப்போகிறார். வழக்கம்போல், இது அவரது கடைசி சீசனாக கூட இருக்கலாம் என்ற பேச்சுகள் வரத் தொடங்கிவிட்டன. அஸ்வின், சாம் கரன், விஜய் சங்கர் என பழைய சிஎஸ்கே வீரர்கள் மீண்டும் அணிக்குள் ஐக்கியமாகி உள்ளனர். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அன்சூல் கம்போஜ், கல்லீல் அகமது, ஷ்ரேயாஸ் கோபால், கமலேஷ் நாகர்கோட்டி என இந்திய வீரர்களின் படையும் பலமாகவே இருக்கிறது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை சாம் கரன் தவிர்த்து ஜேமி ஓவர்டன், நாதன் எல்லிஸ், நூர் அகமது ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பதிரானா ஆகியோர் அணியில் தொடர்கிறார்கள். புதிதாக ஆன்ட்ரே சித்தார்த், குர்ஜப்னீத்சிங், வன்ஷ் பேடி, ராமகிருஷ்ணா கோஷ் இளம் வீரர்களும் பலம் சேர்க்கின்றனர். தளபதி ஜடேஜா அனுபவ வீரராக வலம் வர இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டனாக இது 2வது சீசன் என்பதால் மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் படிக்க | CSK: ருத்ராஜ் உடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யாரு...? சிஎஸ்கே கப் அடிக்க ஒரே வழி!
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் பேட்டிங் காம்பினேஷன்
அந்த வகையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் (CSK Batting Order) எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி இன்னும் ரசிகர்களிடத்தில் உள்ளது. டாப் ஆர்டரில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் வர இருக்கிறார்கள், சேப்பாக்கத்தில் காம்பினேஷன் எப்படி இருக்கும், வெளியில் நடக்கும் போட்டிகளில் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பது முக்கிய கேள்விகளாக உள்ளன.
IPL 2025 CSK: டெவான் கான்வே vs ரச்சின் ரவீந்திரா
ருதுராஜ் கெய்க்வாட் உடன் களமிறங்கப்போவது யார் என்பதும் சிஎஸ்கேவுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. சிஎஸ்கே உடனும், ருதுராஜ் உடனும் நல்ல அனுபவம் கொண்ட கான்வே ஓப்பனிங்கில் விளையாடுவாரா அல்லது கான்வேவின் சக நாட்டு வீரரும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் விருது வென்று உச்சபட்ச பார்மில் ஜொலிக்கும் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங்கில் களமிறங்குவாரா என்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
IPL 2025 CSK: ஓப்பினிங்கில் ரச்சின் ரவீந்திரா நிச்சயம்
இருவரையும் பிளேயிங் லெவனில் விளையாடுவது சற்று கடினம். அப்படி இருவரையும் டாப் ஆர்டரில் விளையாடிவிட்டால் வேகப்பந்துவீச்சாளராக (எல்லிஸ்/பதிரானா) ஒருவரையும், ஆல்ரவுண்டராக (சாம் கரண்/ஜேமி ஓவர்டன்) ஒருவரையும் மட்டுமே சிஎஸ்கேவால் விளையாட வைக்க முடியும்.
சேப்பாக்கத்தில் ஜடேஜா - அஸ்வின் சுழற் கூட்டணியுடன் நூர் அகமது நிச்சயம் களமிறக்க வேண்டும். எனவே, கான்வே - ரச்சினில் ஒருவரையும் மட்டுமே எடுப்பது அணிக்கு நல்லது. சேப்பாக்கம் தவிர்த்து வெளியே விளையாடும்போது கூடுதல் ஓப்பனரை விளையாட வைப்பதற்கு பதில் கூடுதல் ஆல்-ரவுண்டர் அல்லது வேகப்பந்துவீச்சாளர்களில் ஒரு வெளிநாட்டவரை விளையாட வைக்கலாம். ஓப்பனிங்கில் ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா விளையாடுவதே தற்போதைய சூழலுக்கு நல்லது.
மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!
IPL 2025 CSK: நம்பர் 3 மற்றும் நம்பர் 4
அதன்பின் ராகுல் திரிபாதி நம்பர் 3இல் இறங்க வேண்டும். ரெய்னா, ராயுடு, உத்தப்பா, ரஹானே ஆகியோர் கடந்த காலங்களில் செய்த சேவையை திரிபாதியிடம் இந்த வருடம் சிஎஸ்கே எதிர்பார்க்கலாம். அடுத்து நம்பர் 4இல் ஷிவம் தூபே தொடர்வார். இடது கை பேட்டரான இவர் மிடில் ஆர்டரில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க சிறப்பாக செயலாற்றுவார்.
IPL 2025 CSK: பின்வரிசை பேட்டர்கள் யார் யார்?
ஜடேஜா, தோனி, அஸ்வின் ஆகியோர் பின்வரிசையில் நிரந்தரமாக விளையாடப்போவது உறுதி. அதாவது நம்பர் 6, நம்பர் 7, நம்பர் 8 பேட்டர்கள் ரெடி எனலாம். எனவே, நம்பர் 6இல் ஒரு சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டனை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்பாக்ட் வீரராக கூட விஜய் சங்கர் அல்லது தீபக் ஹூடாவை மிடில் ஆர்டரில் இறக்கலாம்.
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் பந்துவீச்சு ஆப்ஷன்
இதனால், நம்பர் 9 வரை பேட்டிங் இருக்கும். இதில் ஷிபம் தூபே, ஜடேஜா, அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, சாம் கரன்/ஓவர்டன் என 5 பௌலிங் ஆப்ஷனும் கிடைத்துவிடுகிறது. எனவே, மிச்சமுள்ள மூன்று இடங்களில் நூர் அகமது, நாதன் எல்லிஸ்/பதிரானா, கலீல் அகமதை விளையாட வைக்கலாம்.
IPL 2025 CSK: சிஎஸ்கே பிளேயிங் லெவன்
அதாவது, சேப்பாக்கத்தில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யும்போது அவர்களின் பிளேயிங் லெவன் இப்படி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் தூபே, சாம் கரன், விஜய் சங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரானா. இம்பாக்ட் வீரர்: அன்ஷுல் கம்போஜ்/கலீல் அகமது.
மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ