CSK vs MI - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

IPL 2025 CSK vs MI: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2025, 03:53 PM IST
  • டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி தொடங்கும்.
  • டிக்கெட் விற்பனை முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது.
  • சிஎஸ்கே - மும்பை அணிகள் வரும் மார்ச் 23ஆம் தேதி மோதுகின்றன.
CSK vs MI - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

IPL 2025 CSK vs MI Ticket Price: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

CSK vs MI Ticket: சிஎஸ்கே - மும்பை டிக்கெட் எப்போது விற்பனை?

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி காலை 10: 15 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. மைதானத்தில் டிக்கெட் விற்பனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. chennaisuperkings.com மற்றும் district.in இணையதளங்களில் நீங்கள் டிக்கெட்டை வாங்கலாம்.

CSK vs MI Ticket: சிஎஸ்கே - மும்பை டிக்கெட் விலை எவ்வளவு?

ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை பல்வேறு அடுக்குகளில் டிக்கெட் விற்பனை நடைபெற இருக்கிறது. அதாவது, C/D/E Lower அடுக்குகளின் டிக்கெட் விலை ரூ.1,700 ஆகும். அதேபோல், I/J/K Upper அடுக்குகளின் டிக்கெட் விலை ரூ.2,500 ஆகும். I/J/K Lower அடுக்குகளின் விலை ரூ.4,000 மற்றும் C/D/E Upper அடுக்குகளின் விலை ரூ.3,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது. KMK Terrace டிக்கெட்டுகளின் விலை ரூ.7,500 ஆகும்.

CSK vs MI Ticket: சிஎஸ்கே - மும்பை டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை

கடந்தாண்டு முதல் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. போலி டிக்கெட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த டிக்கெட்டுகளையும் கள்ளச்சந்தையில் அதிக தொகைக்கு பலரும் விற்பனை செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

CSK vs MI Ticket: பேருந்திலும், மெட்ரோவிலும் இலவசம்

டிக்கெட் விலை ஏதும் அதிகரிப்படவில்லை. KMK Terrace டிக்கெட் மட்டும் கடந்தாண்டு 6,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மார்ச் 23 அன்று போட்டியை காண்பதற்கு ஆன்லைன் டிக்கெட் எடுத்தவர்கள் சென்னை மாநகர பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் இலவசமாகவே பயணித்துக்கொள்ளலாம்.

CSK vs MI Ticket: விளையாடும் நட்சத்திர வீரர்கள் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார். சிஎஸ்கே அணியில் தோனி, அஸ்வின், தூபே, பதிரானா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாட மாட்டார். அதேபோல், ஜஸ்பிரித் பும்ராவும் விளையாட மாட்டார் எனலாம். 

கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட் மற்றும் சிஎஸ்கேவில் இருந்து மும்பை அணிக்கு சென்றுள்ள மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார் ஆகியோர் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார்கள். சென்னை - மும்பை போட்டி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பலோ பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தால் பல்லாயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்க ஆன்லைனில் முண்டியடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!

மேலும் படிக்க | RCB vs KKR: இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர் யார்? பிளேயிங் XI இதோ!

மேலும் படிக்க |  ஐபிஎல் 2025: எந்த அணியில் யார் யார்? கேப்டன் மற்றும் வீரர்களின் முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News