DC vs LSG: இன்று மோதும் டெல்லி - லக்னோ.. கே.எல்.ராகுல் விளையாடுகிறாரா? இரு அணியின் பிளேயிங் 11 என்ன?

Delhi vs Lucknow: ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தின் இன்று (மார்ச் 24) டெல்லி கேப்பிட்டலஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. 

Written by - R Balaji | Last Updated : Mar 24, 2025, 04:25 PM IST
  • ஐபிஎல் தொடர் 22ஆம் தேதி தொடங்கியது
  • இன்று 4வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது
  • அதில் டெல்லி - லக்னோ அணிகள் மோதுகின்றன
DC vs LSG: இன்று மோதும் டெல்லி - லக்னோ.. கே.எல்.ராகுல் விளையாடுகிறாரா? இரு அணியின் பிளேயிங் 11 என்ன?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டருந்த ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக பெங்களூரு அணியும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியும் வென்றன. புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி முதல் இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் உள்ளன. இந்த நிலையில், இன்று (மார்ச் 24) ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. 

Add Zee News as a Preferred Source

விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 7 மணிக்கு டாஸ் வீசப்படும். பலம் வாய்ந்த டெல்லி அணியும் லக்னோ அணி மோதுவதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த அண்டு வரை டெல்லி அணியை வழிநடத்தி வந்த ரிஷப் பண்ட் இம்முறை லக்னோ அணியை வழிநடத்துகிறார். அதேபோல் லக்னோ அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் இம்முறை டெல்லி அணிக்காக கேப்டனாக அல்லாமல் வீரராக விளையாட இருக்கிறார். 

மேலும் படிங்க: IPL 2023 GTvsDC: குஜராத் 2வது வெற்றி: பாண்டிங் - கங்குலி இருந்தும் டெல்லி தோல்வி

 

டெல்லி அணியின் பலம் 

அக்சர் படேல் டெல்லி அணியை வழிநடத்துகிறார். பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் என்பதால், மறுமுனையில் களம் இறங்கும் டு பிளெசிஸ் பொருமையாக அணிக்கு ரன்களை சேர்க்கலாம். மிடில் ஆர்டரில் அக்சர் படேல், அபிஷேக் போரல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இருப்பதால் பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக இருக்கிறது டெல்லி அணி. 

சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அவருக்கு உதவியாக அக்சர் படேல் உள்ளார். வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார். உடன் நடராஜன் இருக்கிறார். யாருக்கு பெயர்போன நடராஜன் டெத் ஓவர்களில் எதிர் அணியை அச்சுருத்தக்கூடியவராக இருக்கிறார். 

கே.எல். ராகுல் விளையாடுவாரா? 

கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், முதல் இரண்டு, மூன்று போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இது குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, கே.எல்.ராகுல் அணியில் சேர்ந்துவிட்டார். ஆனால் அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றார். 

லக்னோ அணியின் பலம் மற்றும் பலவீணம் 

லக்னோ அணியை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார். பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் அர்ஷின் குல்கர்னி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன் டவுனாக ரிஷப் பண்ட் களம் இறங்குவார். அடுத்ததாக நிகோலஸ் பூரான், மில்லர் ஆகியோ உள்ளதால் மிடில் ஆர்டர் பலமாக தெரிகிறது. 

பந்து வீச்சை பொறுத்தவரை லக்னோ அணி சற்று பலவீணமாகவே தெரிகிறது. அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான மோஷின் கான், மயங்க் யாதவ், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். எனவே லக்னோ அணியின் பந்து வீச்சு பரிதாப நிலைமையிலேயே உள்ளது. 

மோஷின் கானுக்கு பதிலாக ஷ்ரதுல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ரவி பிஷ்னேய், ஷர்துல் தக்கூர், சமர் ஜோசப், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் உள்ளனர். லக்னோ அணி சேசிங் வந்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அதுவே முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணியின் வெற்றி கேள்விகுறியே. ஏன்னென்றால், பந்து வீச்சு கூறும்படி இல்லாததுதான் அணியின் பிரச்சனையாக உள்ளது. 

மைதானம்: டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம். 

நேரம்: இரவு 7 மணி அளவில் டாஸ் வீசப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். 

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம். 

இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11

டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்) , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், (இம்பேக்ட் வீரர்: கருண் நாயர்/மோஹித் ஷர்மா)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப் (இம்பேக்ட் வீரர்: ஆகாஷ் சிங்/ஷாபாஸ் அகமது/மணிமாரன்)

மேலும் படிங்க: சிஎஸ்கே-வை திணறடித்த இளம் வீரர்.. யார் இந்த விக்னேஷ் புத்தூர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News