)
நேற்று (ஜூன் 01) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடக்கூடிய அணிகள் உறுதியானது. அதன்படி குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது.
ஏற்கனவே குவாலிஃபையர் 1 சுற்றில் இந்த இரண்டு அணிகள் தான் மோதிக்கொண்டது. ஆனால் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு சென்று அங்கு மும்பை அணியை வீழ்த்தி மீண்டும் ஆர்சிபி அணியுடன் மோத தயாராகி உள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இம்முறை ஆர்சிபி அணி இறுதி போட்டிக்கு வந்துள்ளதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐபிஎல் அணிகளில் ஆர்சிபி அணி பெரிய ஒரு அணியாக கருதப்படுகிறது. ஏராளமான ரசிகர்களை அந்த அணி கொண்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை 17 ஆண்டு வறட்சியை ஆர்சிபி போக்கி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
ஐபிஎல் என்றாலே கோப்பைதான் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தாலும், ரொக்கப் பரிசுகளும் இந்த தொடரின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரின் மவுசு அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயம் ரன்னர் அப்-க்கு ரூ. 13 கோடியும், பிளே ஆஃப் சுற்றுகளில் தோல்வியடைந்த அணிகளுக்கு ரூ.7 கோடி மற்றும் ரூ. 6.5 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது, வெற்றி பெறும் அணிக்கு வெறும் ரூ. 4.8 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் இருந்து 4 மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், ஆரஞ்சு கேப், ப்ரப்பில் கேப், சூப்பர் ஸ்ட்ரைக்கர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், கேம் சேஞ்சர், வளர்ந்து வரும் வீரர், மிகவும் மதிப்புமிக்க வீரர் என அனைவருக்குமே பரிசு தொகை உள்ளது. அதன்படி,
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ