நான் சிஎஸ்கே-வின் மறைமுக கேப்டனா?.. எம். எஸ். தோனி விளக்கம்

ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வானது குறித்து எம். எஸ். தோனி பேசி இருக்கிறார். 

Written by - R Balaji | Last Updated : Mar 24, 2025, 10:14 PM IST
நான் சிஎஸ்கே-வின் மறைமுக கேப்டனா?.. எம். எஸ். தோனி விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் இருந்தாலும், எம். எஸ். தோனி தான் கேப்டனாக செயல்படுகிறார் என ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் The MSD Experience என்ற நிகழ்ச்சியில் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜை தேர்வு செய்தது குறித்து பேசி இருக்கிறார். 

இது தொடர்பாக பேசிய அவர், ருதுராஜின் தீவிரமான திட்டமிடலே இதற்கு காரணம். மிகவும் அமைதியான மனநிலையை கொண்டவர். பல ஆண்டுகளாக சென்னை அணியில் பயணிக்கிறார். பயிற்சியாளருடன் நல்ல தொடர்பில் உள்ளார். இது போன்ற விஷயங்களே அவரை கேப்டனாக தேர்வு செய்ததற்கு காரணம். 

மேலும் படிங்க: கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

 

2023 ஐபிஎல் சீசன் முடிந்த உடனே சொல்லிவிட்டேன். நீ தான் அடுத்த சென்னை அணியின் கேப்டன் என்று. ஆனாலும் என்னை மறைமுக கேப்டன் என பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் 99 சதவீதம் அவர்தான் முடிவுகளை எடுக்கிறார். நான் அவருக்கு வழிகாட்டுகிறேன். ஆனால் முக்கியமான முடிவுகளை எடுப்பது அவர்தான் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தோனி, 2008க்கும் தற்போதுள்ள டி20க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மைதானங்கள், பந்தின் தன்மை என பல விஷயங்கள் மாறிவிட்டன. அதேபோல், அதிக ரன்கள் வருகிறது. பேட்டர்கள் புதிய ஷாட்களுக்கு முயற்சிக்கின்றனர். நானும் மாற வேண்டும். இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது. விராட் கோலியை பொருத்தவரை அவர் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தினார். 

அவர் இளம் வீரராக இருந்தபோது, எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடக்கும். தற்போது இருவரும் கேப்டன் இல்லை. எனவே போட்டிக்கு முன்பாக அதிகம் பேச முடிகிறது சீனியர் மற்றும் ஜூனியர் வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் இருக்கிறது என கூறினார்.    

மேலும் படிங்க: சிஎஸ்கே ஏமாற்றி வென்றதா? சர்ச்சையில் சிக்கிய ருதுராஜ், கலில்.. பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News