டம்மியான ராஜஸ்தான்... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி - புள்ளிப்பட்டியல் அப்டேட்!

RR vs KKR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2025, 11:50 PM IST
  • கேகேஆர் முதல் வெற்றியை பெற்றது.
  • ராஜஸ்தான் அணிக்கு 2வது தோல்வி
  • கடைசி இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
டம்மியான ராஜஸ்தான்... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி - புள்ளிப்பட்டியல் அப்டேட்!

IPL 2025, RR vs KKR: ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று 6வது லீக் போட்டியில் மோதின. அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Add Zee News as a Preferred Source

RR vs KKR: ராஜஸ்தான் சுமாரான தொடக்கம்

ராஜஸ்தான் அணியில் ஃபசல் ஹக் ஃபரூக்கிக்கு, பதில் ஹசரங்கா சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் சுனில் நரைனுக்கு பதில் மொயின் அலி சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் ஓரளவு சரியாகவே அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளேவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

RR vs KKR: மொத்தமாக சரிந்த மிடில் ஆர்டர்

இதையடுத்து, களமிறங்கிய ரியான் பராக் அதிரடியுடன் விளையாடினார். ஆனால், அந்த அதிரடி ஆபத்தில் முடிந்தது.  பவர்பிளே முடிந்து 8வது ஓவரை வீச வந்த வருண் சக்ரவர்த்தியிடம் சிக்கி ரியான் பரான் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்ஸருடன் 25 ரன்களை அடித்திருந்தார்.  அதற்கடுத்த ஓவரிலேயே மொயின் அலி பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார் அவர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 29 ரன்களை சேர்த்திருந்தார். அதற்கடுத்து நிதிஷ் ராணா 8, ஹசரங்கா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரேல் மட்டும் சற்று பொறுமை காட்டினார். மறுமுனையில் விக்கெட் சரிந்துகொண்டே இருந்தது. கடந்த போட்டியில் கலக்கிய ஷுபம் தூபே 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

RR vs KKR: ஆறுதல் அளித்த ஜூரேல்

19வது ஓவரின் முதல் ஜூரேல் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 33 ரன்களை அடித்திருந்தார். அடுத்து, ஹெட்மயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் 2 சிக்ஸருடன் 16 ரன்களை அடித்து ஆர்ச்சர் ஆறுதல் அளித்தார். அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களையே ராஜஸ்தான் அணியால் அடிக்க முடிந்தது. கேகேஆர் அணி பந்துவீச்சில் வருண், மொயின், ஹர்ஷித், அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

RR vs KKR: நிதான தொடக்கம் 

152 ரன்கள் எளிய இலக்கு என்றாலும் ராஜஸ்தான், கேகேஆர் பேட்டிங்கை தடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. முதல் சில ஓவர்களும் அப்படிதான் அமைந்தது. மொயின் அலி - குயின்டன் டி காக் ஜோடி ஓபனிங்கில் வந்தது. பவர்பிளேவில் மொயின் அலி ரன் எடுக்க திணறினார். ஆனால், டி காக் ஒருமுனையில் ரன்களை குவித்தார். பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி கேகேஆர் 40 ரன்களை எடுத்திருந்தது.

RR vs KKR: ஆட்ட நாயகன் காட்டிய டி காக்

பவர்பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி ரன்அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 5 ரன்களையே அடித்திருந்தார். அதன்பின் வந்த ரஹானே சற்று நிதானம் காட்டினார். அவர் 15 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் டி காக் அதிரடி காட்ட தொடங்கினார்.

ஹசரங்கா, ரியான் பராக், தீக்ஷனா என சுமாரான சுழற்பந்துவீச்சை டி காக் சிதறடித்தார். டி காக் அதிரடி காட்டினாலும் ரகுவன்ஷி பொறுமை காத்து விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். இதன்மூலம், 17.3 ஓவர்களிலேயே கேகேஆர் அணி இலக்கை கடந்து இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

டி காக் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 97 ரன்களையும், ரகுவன்ஷி 17 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்களையும் எடுத்திருந்தார். ஆர்ஆர் பந்துவீச்சில் ஹசரங்கா மட்டும் 1 விக்கெட்டை எடுத்தார். டி காக் ஆட்டநாயகன் விருதை வெற்றார்.

IPL 2025, RR vs KKR: புள்ளிப்பட்டியல் அப்டேட்

புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. 

கொல்கத்தா அணி 1 தோல்வி, 1 வெற்றியுடன் 2 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. லக்னோ, மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகள் முறையே கடைசி 4 இடங்களில் உள்ளன.

மேலும் படிக்க | SRH vs LSG: பயமுறுத்தும் பேட்டிங்... அய்யோ பாவம் பௌலிங் - 300 ரன்களை எந்த அணி அடிக்கும்?

மேலும் படிக்க | இந்த பவுலருக்கு பதிலா இவர கொண்டு வாங்க.. ஆர்சிபி-யை வீழ்த்த சிஎஸ்கே போடும் ஸ்கெட்ச்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News