Delhi Capitals IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது கொஞ்சம் பின்னடைவாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் விளையாட வர மாட்டேன் என கூறிவிட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா விளையாட இருப்பதால் அதற்கான பயிற்சியை தொடங்க இருப்பதாகவும், அதனால் ஐபிஎல் விளையாட வரவில்லை என கூறியுளார்.
அதேபோல் பாப் டூபிளசிஸ் டெல்லி அணியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. ஆனால், அவர் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரேசர் மெக்குர்க், வருகையும் சந்தேகமாகியுள்ளது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய பிளேயராக இருக்கிறார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் இப்போது அணி நெருக்கடியாக இருக்கும் சமயத்தில் அவரின் இருப்பை டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ஐபிஎல் விளையாட வரவில்லை என அவர் கூறிவிட்டதாக தெரிகிறது.
இதேபோல் டெனாவன் பெரெய்ராவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வரவில்லை. முக்கிய பிளேயர்கள் பலர் எடுத்திருக்கும் இந்த முடிவு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. ஏனென்றால் இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடங்கியபோது முதல் பாதி போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்த அந்த அணி, இரண்டாவது பாதி ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தது. இது அந்த அணியின் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை கடினமாக்கியிருக்கிறது.
இப்போதும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு முழுவதுமாக முடிந்துவிடவில்லை. இன்னும் எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். அதனால், முக்கியமான பிளேயர்கள் அணியில் இருக்க வேண்டும் என டிசி அணி எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். இப்போதைய சூழலில் அந்த அணி ஐபிஎல் 2025 பாயிண்ட்ஸ் டேபிளில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
மேலும் படிங்க: இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும் படிங்க: இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ