ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் 2 மேட்சும் தோற்றால் ஒரு அணியும் பிளே ஆப் செல்ல முடியாது

IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் தோற்றால் ஒரு அணியும் பிளேஆப் இடத்தை உறுதிசெய்ய முடியாது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2025, 01:27 PM IST
  • ஐபிஎல் பிளே ஆப் 2025 ரேஸ் விவரம்
  • 4 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி
  • ராஜஸ்தான் கையில் 3 அணிகளின் தலைவிதி
ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் 2 மேட்சும் தோற்றால் ஒரு அணியும் பிளே ஆப் செல்ல முடியாது

IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப்-க்கான கிளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பில் பிரகாசமாக நீடிக்கும். அதேநேரத்தில் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பதை உறுதி செய்ய முடியாது. ஏனென்றால் பஞ்சாப் அணியின் இன்றைய வெற்றி நான்கு இடங்களுக்கான போட்டியை மேலும் அதிகரிக்கும். ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால் ஆர்சிபி அணி அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அத்துடன் இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற முதல் அணி என்ற பெருமையையும்பெற்றுக் கொள்ளும். 

அதற்கு ஆப்படிக்கவே பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெல்ல அதிதீ முனைப்பு காட்டும். ஒருவேளை பஞ்சாப் அணி தோற்றால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு கேள்விக்குள்ளாகும். டெல்லி, மும்பை அணிகளுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். நாளை நடக்கும் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் கட்டாயம் டெல்லி அணி வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை குஜராத் வெற்றி பெற்றுவிட்டால் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு  அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிடும். 

அதுவே, இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று, நாளைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆப்  சுற்றுக்குள் சென்றுவிடும். எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கு மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவும். ஒருவேளை இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று, நாளைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றால், அல்லது ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணியும் பிளே ஆப் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாது.

அதாவது டெல்லி அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அப்போதும் ரன்ரேட் நன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மும்பை அணி அந்த இடத்துக்கு போட்டியில் இருக்கிறது. இப்படியான நெருக்கடியான மற்றும் பரபரப்பான சூழலில் தான் இன்று முதல் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இருக்கப்போகின்றன. எந்த அணி பிளே ஆப் சுற்றை முதலாவதாக உறுதி செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் படிங்க: பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி - கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

மேலும் படிங்க: ஐபிஎல்லில் மிகவும் மந்தமாக விளையாடிய 5 வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News