IPL 2025 prize money Details : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. அத்துடன் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 பரிசுகள் மற்றும் பண மழை வரிசையாக அறிவிக்கப்பட்டது. அதில் சாய் சுதர்சனுக்கு கொடுக்க வேண்டிய ஒரு பரிசை மும்பை இந்தியன்ஸ் பிளேயர் சூரியகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் 2025 தொடரின் மிகவும் மதிப்பு மிக்க பிளேயர் விருதுக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோப்பையும் 15 லட்சம் ரூபாய் பரிசும் கொடுக்கப்பட்டது.
இந்த விருதுக்கான போட்டியில் சாய் சுதர்சன் இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் பிளேயரான அவர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார். இதற்காக அவர் பல்வேறு பரிசுகளை வென்றிருந்தாலும் தொடரின் மிகவும் மதிப்பு மிக்க பிளேயர் விருதுக்கான போட்டியில் முன்னணியிலேயே இருந்தார். இவருக்கு போட்டியாக சூர்யகுமார் யாதவ் இருந்தார். கடைசி நேரத்தில் இந்த பரிசு சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டது. சாய் சுதர்ஷன் ஐபிஎல் 2025 சீசனில் அதிகபட்சமாக 759 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், சூரியகுமார் யாதவ் 717 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன்கள் எடுத்த போதிலும், சாய் சுதர்ஷன் சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரராக (தொடர் நாயகன்) தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஐபிஎல் பரிசுத் தொகை
1. சாம்பியன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.20 கோடி
2. ரன்னர்-அப் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ.12.5 கோடி
3. சாய் சுதர்ஷன் - ஆரஞ்சு தொப்பி (அதிக ரன்கள்) - ரூ.10 லட்சம்
4. பிரசித் கிருஷ்ணா - பர்பிள் தொப்பி (அதிக விக்கெட்டுகள்) - ரூ.10 லட்சம்
5. சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருது - ஜிதேஷ் சர்மா - ரூ.1 லட்சம்
6. ஃபேண்டஸி கிங் ஆஃப் தி மேட்ச் விருது - ஷஷாங்க் சிங் - ரூ.1 லட்சம்
7. சூப்பர் சிக்ஸ் ஆஃப் தி மேட்ச் - ஷஷாங்க் சிங் - ரூ.1 லட்சம்
8. 4ஸ் ஆப் தி மேட்ச் - பிரியான்ஷ் ஆர்யா - ரூ.1 லட்சம்
9. கிரீன் டாட் பால்ஸ் ஆஃப் தி மேட்ச் - க்ருணால் பாண்டியா - ரூ.1 லட்சம்
10. ஆட்ட நாயகன் - க்ருணால் பாண்டியா - ரூ.5 லட்சம்
11. சீசனின் வளர்ந்து வரும் வீரர் - சாய் சுதர்ஷன் - ரூ.10 லட்சம்
12. சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் சீசன் - வைபவ் சூரியவன்ஷி - ரூ.10 லட்சம் + டாடா கர்வ்வ்
13. சீசனின் பேண்டஸி கிங் - சாய் சுதர்ஷன் - ரூ.10 லட்சம்
14. சீசனின் சூப்பர் சிக்ஸ் - நிக்கோலஸ் பூரன் - ரூ.10 லட்சம்
15. சீசனின் அதிக பவுண்டரி - சாய் சுதர்ஷன் - ரூ.10 லட்சம்
16. சீசனின் கிரீன் டாட் பால்ஸ் - முகமது சிராஜ் - ரூ.10 லட்சம்
17. சீசனின் சூப்பர் கேட்ச் - கமிந்து மெண்டிஸ் - ரூ.10 லட்சம்
18. ஃபேர்பிளே விருது - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.10 லட்சம்
19. சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (போட்டியின் வீரர்) - சூர்யகுமார் யாதவ் - ரூ.15 லட்சம்
20. மைதான விருது - டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கம் - ரூ.50 லட்சம்
மேலும் படிக்க | நேரம் வந்துவிட்டது.. கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!
மேலும் படிக்க | இன்றுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









