IPL 2025: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மீண்டும் போட்டிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பியுள்ளதால் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல மாற்றங்களுடன் போட்டிகள் தொடங்க உள்ளது. சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் மொத்தம் ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. ஐபிஎல் பைனல் வரும் ஜூன் 3ம் தேதி நடக்க உள்ளது.
மேலும் படிங்க: விராட் கோலியின் இடம் யாருக்கு...? போட்டிப்போடும் 5 வீரர்கள்!
"மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனைக்கு பிறகு மீதமுள்ள போட்டிகளை உடனடியாக நடத்துவதாக முடிவு செய்துள்ளோம்" என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. மே 9ம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த போட்டிகள் மே 24ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. ஐபிஎல் லீக் போட்டிகள் மே 27ம் தேதி உடன் முடிகிறது. அதனை தொடர்ந்து பிளே ஆப் போட்டிகள் மே 29ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது வெளியாகியுள்ள புதிய அட்டவணையில் எந்த ஒரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் இல்லை.
மொத்தமே ஆறு மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்பு கொல்கத்தாவில் நடைபெற இருந்த பிளே ஆப் போட்டிகள் தற்போது மாற்றப்பட்டு, ஒரு லீக் போட்டிகள் கூட அங்கு நடத்த திட்டமிடப்படவில்லை. காரணம் கொல்கத்தாவில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதால் சில வெளிநாடு வீரர்கள் கலந்து கொள்வது சந்தேகத்தில் உள்ளது. காரணம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டேட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதே சமயம் இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர். எனவே சில அணிகளின் காம்பினேஷன் முற்றிலும் மாறுபட உள்ளது.
IPL 2025 UPDATED SCHEDULE. pic.twitter.com/57pxNUwqu0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2025
மேலும் படிங்க: 'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு - ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ