ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!

IPL 2025: ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு அதிக பார்வையாளர்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 20, 2025, 02:26 PM IST
  • ஐபிஎல் 2025 வரலாற்று சாதனை
  • வெளியான புள்ளிவிவரங்கள்
ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!

IPL Record Breaking: ஐபிஎல்லின் 18வது தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது இது தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. 

Add Zee News as a Preferred Source

2025 ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்தமாக 100 கோடி பார்வையாளர்கள் தொலைகாட்சி மற்றும் இணைய வழியில் பார்த்துள்ளனர். மொத்தமாக 84000 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் இதுவே வரலாற்றில் அதிக பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் பார்க்கப்பட்ட நேரமாகும். குறிப்பாக மொபைல், இணையதளங்கள் போன்ற டிஜிட்டல் ப்ளட்ஃபார்மில் கடந்த ஆண்டை விட அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

இதில் 2300 கோடி பார்வைகள் மற்றும் 38,460 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டை விட இணைய வழியில் தொலைக்காட்சியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு விட தொலைகாட்சி மூலமும் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. மொத்தம் 48,600 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கிறது. இதுவே தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி அதிக அளவில் பார்க்கப்பட்ட நிகழ்வாகும்.  

இறுதி போட்டியில் சாதனை 

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி மோதின. இப்போட்டியை மிக அதிக அளவிலான பார்வையாளர் பார்த்துள்ளனர். மொத்தம் 31.70 கோடி நிமிடங்கள் ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக மாறியுள்ளது. அதேசமயம் தொலைக்காட்சியில் இறுதி போட்டியை 16.9 கோடி பார்வையாளர்கள் 1500 கோடி நிமிடங்கள் வரை இறுதி போட்டியை பார்த்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இந்த அண்டே அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News