IPL: கேப்டன்ஸியை கையில் கொடுக்கும் போது தோனி என்ன சொன்னார்...? ருதுராஜ் சொன்ன சீக்ரெட்

IPL 2025: ஐபிஎல் தொடரில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டபோது தோனி, தன்னிடம் என்ன கூறினார் என்பதை இங்க பார்க்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2025, 09:00 PM IST
  • தோனி 2023ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்தார்.
  • ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரும் கேப்டனாக இருந்தனர்.
  • கடந்தாண்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தார்.
IPL: கேப்டன்ஸியை கையில் கொடுக்கும் போது தோனி என்ன சொன்னார்...? ருதுராஜ் சொன்ன சீக்ரெட்

IPL 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன.

Add Zee News as a Preferred Source

IPL 2025: அணிகளின் கேப்டன்கள் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, கேகேஆர் அணிக்கு ரஹானே, ஹைதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ், ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதார், ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், டெல்லி அணிக்கு கேஎல் ராகுல், குஜராத் அணிக்கு சுப்மன் கில், லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட், பஞ்சாப் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்ஸி பொறுப்பை பெற்றுள்ளனர்.

IPL 2025: சிஎஸ்கேவின் நீண்ட கால கேப்டன் தோனி

அந்த வகையில், சிஎஸ்கே அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தோனியே கேப்டனாக இருந்தார். இடையிடையே சில போட்டிகளில் ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த 2022 சீசனில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த சீசனிலேயே தோனி மீண்டும் கேப்டன்ஸியை பெற்று, 2023இல் சிஎஸ்கேவுக்கு 5வது கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.

மேலும் படிக்க | அழியும் ஓடிஐ கிரிக்கெட்...!? அஸ்வினிடம் வருத்தப்பட்ட தோனி - என்ன மேட்டர்?

IPL 2025: கடந்தாண்டு கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்

அப்படியிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த சீசன் தொடங்குவதற்கு ஒருநாளுக்கு முன் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற கேப்டன்கள் போட்டோஷூட்டின் மூலம்தான் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் நியமிக்கப்பட்டதே தெரியவந்தது. அதன்பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

IPL 2025: தோனி என்னிடம் கூறியது என்ன?

இந்நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன்ஸியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி கொடுத்தபோது என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. அதற்கான விடை இன்று ருத்ராஜ் கெய்க்வாட் மூலமே தெரிந்துள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்.எஸ். தோனி என்னிடம் வந்து, 'இந்த வருடம் நான் தலைமை தாங்கவில்லை, நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்கள்...' என்றார். நான் அதிர்ச்சியடைந்து, 'முதல் ஆட்டத்தில் இருந்தேவா...? உறுதியாக கூறுகிறீர்களா...?' என்று கேட்டேன். தயாராக சில நாட்கள் மட்டுமே இருந்ததால், அது மிகப்பெரிய தகவலாக இருந்தது என்றார்.

"ஆனால் அவர் எனக்கு உறுதியளித்தார், 'இது உங்கள் அணி. நீங்களே முடிவுகளை எடுங்கள். பீல்டிங் அமைப்பு குறித்து அங்கங்கு தேவைப்படும்போது தவிர, நான் வேறு விஷயங்களில் தலையிட மாட்டேன். அதேபோல், என் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என கட்டாயமில்லை' என கூறினார். அந்த நம்பிக்கை எனக்கு நிறைய அர்த்தத்தை கொடுத்தது" என்றார்.

மேலும் படிக்க | CSK vs MI: சிஎஸ்கேவை தாக்க ரெடியாகும் மும்பை; கேப்டன் யார்? பிளேயிங் லெவன் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News