ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள்

IPL 2026 Auction: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள் பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 13, 2025, 02:05 PM IST
  • ஐபிஎல் 2026 முக்கிய அப்டேட்
  • மும்பை கழட்டிவிடும் 4 பிளேயர்கள்
  • தீபக் சாஹர் முதல் முஜ் உர் ரஹ்மான் வரை
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள்

IPL 2026 Auction: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 2024 ஆம் ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி,  ஐபிஎல் 2025 சீசனில் கம்பேக் கொடுத்தது. இருப்பினும், குவாலிஃபயர் 2-ல் பஞ்சாப் கிங்ஸிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்த சீசனில் மீண்டும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற நோக்கில் அந்த அணி இருக்கிறது. இதற்காக, ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் தங்கள் பணப் பையை (Purse) அதிகரிப்பதற்காக, சரியாகச் செயல்படாத சில வீரர்களை விடுவிக்க (Release) முடிவெடுத்துள்ளது. ஏலத்தின் மூலம், அணியை மேலும் வலுப்படுத்தவும், சிறப்பான வீரர்களை வாங்கவும் மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளது. அதனால், 4 பிளேயர்களை அந்த அணி விடுவிக்க வாய்ப்புள்ளது.

Add Zee News as a Preferred Source

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியல்

1. தீபக் சாஹர் (Deepak Chahar)

2025 மெகா ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9.25 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர், கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. அவர் 14 போட்டிகளில் விளையாடி 9.17 என்ற அதிக எக்கானமி விகிதத்துடன் வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அவரது அதிக சம்பளம் மற்றும் குறைவான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அடுத்த சீசனுக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளரை வாங்குவதற்காக, அவரை விடுவித்து கையிருப்பு பணத்தை அதிகரிக்க மும்பை முடிவெடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பலமுறை கோப்பை வெல்வதில் முக்கியப் பங்காற்றிய சாஹர், இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8.13 எக்கானமியுடன் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2. ராபின் மின்ஸ் (Robin Minz)

2025 மெகா ஏலத்தில் ரூ. 65 லட்சம் தொகைக்கு ராபின் மின்ஸ் வாங்கப்பட்டார். அவருக்குக் கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. 2025 சீசனில் 2 போட்டிகளில் விளையாடி 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் தரத்திற்கு அவர் தயாராக இல்லாதது போல் தோன்றியதால், அவரை விடுவித்து, நம்பகமான விக்கெட் கீப்பர்-பேட்டருக்காக (Wicket-Keeper Batter) அந்த இடத்தை MI ஒதுக்க வாய்ப்புள்ளது.

3. முஜீப் உர் ரஹ்மான் (Mujeeb Ur Rahman)

மும்பை அணி இவரை கடந்த சீச்னில் ரூ. 2 கோடிக்கு வாங்கியது. ஆனால், முஜீப், MI-யின் பிளேயிங் XI-ல் (Playing XI) சரியாகப் பொருந்தவில்லை. அவர் ஒரே ஒரு போட்டியில் விளையாடி, இரண்டு ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவரை விடுவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது, தக்க வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 2 விதமான முடிவுகளில் மும்பை அணி இருக்கிறது. பல அணிகளுக்காக விளையாடியுள்ள முஜீப், இதுவரை 20 ஐபிஎல் போட்டிகளில் 8.34 எக்கானமியுடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

4. ரீஸ் டாப்லி (Reece Topley)

2025 ஐபிஎல் ஏலத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு டாப்லி வாங்கப்பட்டார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டாப்லி, 2025 ஐபிஎல் சீசனில் குவாலிஃபயர் 2-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதில் அவர் 3 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிகமாக அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு இவரின் மோசமான பந்துவீச்சும் காரணம். அதனால், டாப்லியை விடுவிக்க MI முடிவெடுத்துள்ளது.  பவர்ப்ளேயில் (Powerplay) பந்துவீசக்கூடிய, அதே சமயம் ஸ்லாக் ஓவர்களில் (Slog Overs) துல்லியமான யார்க்கர்களை வீசக்கூடிய திறன் கொண்ட டாப்லி, இதுவரை 6 ஐபிஎல் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க: India vs Australia: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பங்கமாய் கலாய்த்த பாட் கம்மின்ஸ்!

மேலும் படிக்க: அஷ்வினுக்கு பதில் யார்? சென்னையில் முகாமிடும் தோனி, ருதுராஜ், பிளெமிங்!

மேலும் படிக்க | ஐபிஎல் 2026: முக்கிய வீரர்களை கழட்டிவிடும் அணிகள்.. யாரெல்லாம் பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News