)
IPL 2026 Latest Updates: ஐபிஎல் 2026 தொடரில் முதல் அணியாக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 6வது தோல்வியை பதிவு செய்துள்ளது, இதனால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் தரம்சாலா நகரில் நடைபெற்ற மாலை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 222 ரன்களை குவித்தது. ஆர்சிபி பேட்டிங்கில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 73*, விராட் கோலி 58, தேவ்தத் படிக்கல் 45 ரன்களை குவித்தனர். பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் ஹர்பிரீத் சிங் 2, சஹால் மற்றும் அர்ஷ்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
223 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. எனினும் ஷஷாங்க் சிங் 56, கூப்பர் கனொலி 37, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 37 ரன்களை அடித்தாலும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணியால் அடிக்க முடிந்தது. ரஷிக் சலாம் 3, புவனேஷ்வர் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, முதல் அணியாக நடப்பு தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தற்போதைய சூழலில் ஆர்சிபி அணி முதலிரண்டு இடங்களை உறுதிசெய்துவிட்டதாகவே தெரிகிறது. அடுத்து ஆர்சிபி அணி வரும் மே 22ஆம் தேதி அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
https://t.co/3u5qL0Zn75#KhelBindaas | #PBKSvRCB pic.twitter.com/1XAjPzeHnV
— IndianPremierLeague (@IPL) May 17, 2026
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு அரிதாகி உள்ளது. வரும் மே 23ஆம் தேதி பஞ்சாப் அணி, லக்னோ அணியை லக்னோ எக்னா மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் பஞ்சாப் 15 புள்ளிகளை பெறும்.
மற்ற அணிகளின் வெற்றித் தோல்வியை பொறுத்து பஞ்சாப் பிளே ஆப் வருமா என்பது தெரியவரும். இருப்பினும் அது மிக மிக கடினம். ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி, புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி கடைசியாக எக்னா மைதானத்தில் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நாளை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், மே 21ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணி பிளே ஆப் போவது எளிதாகிவிடும். ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளின் தோல்வியும் சிஎஸ்கேவுக்கு பெரும் உதவியாக அமையும்.
Who will join @RCBTweets in the To#TATAIPL | #KhelBindaas pic.twitter.com/YZaTLyHFhT
— IndianPremierLeague (@IPL) May 17, 2026