One Last Time... தோனிக்கு இதுதான் நிச்சயமாக கடைசி சீசன்... முக்கிய காரணம் என்ன?

CSK Dhoni: தோனிக்கு இதுதான் நிச்சயம் கடைசி சீசன் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2025, 07:38 AM IST
  • சிஎஸ்கே கடந்த சீசனில் கடைசி இடத்தில் முடிந்தது.
  • ஜடேஜா தற்போது ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்படுகிறார்.
  • பல வீரர்களை சிஎஸ்கே விடுவிக்க உள்ளது.
One Last Time... தோனிக்கு இதுதான் நிச்சயமாக கடைசி சீசன்... முக்கிய காரணம் என்ன?

MS Dhoni One Last Time In CSK: வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையொட்டி, அனைத்து அணிகளும் நாளை (நவ. 15) தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். இதன்மூலம், யார் யார் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்படுகிறார்கள் என்ற விவரமும் தெரியவரும்.

Add Zee News as a Preferred Source

IPL 2026 CSK: டிரேட் செய்யப்படும் ஜடேஜா

5 முறை சாம்பியனும், கடந்த சீசனில் கடைசி இடத்தில் நிறைந்த செய்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுகளை கிளப்பியிருக்கிறது. தனது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவை டிரேட் மூலம் கொடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து அதன் கேப்டன் சஞ்சு சாம்சனையே சிஎஸ்கே வாங்க இருப்பதாக செய்திகள் நிரம்பி வழிந்தன. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தாலும், ஒட்டுமொத்த அணியின் நலன் சார்ந்த எடுக்கப்பட்ட முடிவாக இது பார்க்கப்படுகிறது.

IPL 2026 CSK: வெளியேற்றப்படும் முக்கிய வீரர்கள்

இந்தச் சூழலில், சிஎஸ்கே அணி பல்வேறு வீரர்களை விடுவிடுத்து அதிக பர்ஸ் தொகையுடன் மினி ஏலத்திற்கு செல்ல தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் அணிக்குள் வருவதால் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே ஆகிய ஓபனர்களை சிஎஸ்கே விடுவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, வன்ஷ் பேடி உள்ளிட்ட இந்திய வீரர்களையும் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. ஜடேஜாவுடன் சாம் கரனும் டிரேட் செய்யப்பட இருக்கிறார், அஸ்வின் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். இவை அனைத்துமே தகவல்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்படவில்லை.

CSK Dhoni: தோனியின் One Last Time

ஆனால், மகேந்திர சிங் தோனி வரும் ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவார் என்பது மட்டும் தற்போது உறுதியாக தெரியவந்துள்ளது. கடந்த வாரமே சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியிருந்தாலும், நேற்றிரவு சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில், அவர் 'One Last Time' (கடைசியாக ஒருமுறை) விளையாட இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.

CSK Dhoni: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்தஐபிஎல் சீசனை முன்னிட்டு தோனி சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அணிந்திருந்த டீ-சர்டில் One Last Time என மோர்ஸ் கோட் வடிவத்தில் அச்சிடப்பட்டிருந்தது. தற்போது அதே மோர்ஸ் கோடை பயன்படுத்தி சிஎஸ்கே அணி நிர்வாகம், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது. இதுவரை தோனி எந்த இடத்திலும் இந்த சீசனோடு ஓய்வு பெற போகிறேன் என அறிவிக்கவில்லை. ஆனால், தன்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் இருக்கும் என தோனி பேசியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

CSK Dhoni: தோனி ஓய்வு பெற முக்கிய காரணம்...

இந்நிலையில், தோனிக்கு இதுதான் நிச்சயம் கடைசி சீசன் என கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு பெரும்பாலானோர் முன்வைக்கும் முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான், அது சஞ்சு சாம்சனின் வருகை. தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பர் பேட்டர் யார்?, தோனியை போல் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர் யார்? என சிஎஸ்கேவை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. அதற்கு சஞ்சு சாம்சன் ஒற்றை பதிலாக வந்துள்ளார். 

விக்கெட் கீப்பிங்கில் மட்டுமின்றி தோனியை போல் கேப்டன்ஸியிலும் ஜொலிப்பவர். தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன்ஸி இருந்தாலும், அது சஞ்சுவுக்கு கொடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சிஎஸ்கேவில் அடுத்தடுத்த தலைகள் வளர்ந்த பின், பிரதான 'தல'-ன் தேவை குறைந்துவிடும் என்பதால் இந்த 2026 சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அதேபோல், ஜடேஜாவும் சென்றுவிட்டதால் சிஎஸ்கேவில் புதிய தலைமுறையின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. OG சிஎஸ்கே வீரராக தோனி மட்டுமே இருக்கிறார், எனவே அவர் இந்த சீசனோடு ஓய்வு பெறுவதே அணியின் நலனுக்கும் சிறந்தது. 44 வயதாகும் தோனி வரும் சீசனில் பாதியுடன் கூட விடைபெற அதிக வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | CSK எடுக்கும் முக்கிய முடிவுகள் - மினி ஏலத்தில் எவ்வளவு தொகை கையில் இருக்கும்?

மேலும் படிக்க | ஐபிஎல் 2026 : தோனியின் 5 மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை

மேலும் படிக்க | ஜடேஜாவின் முக்கிய நிபந்தனை... பெரிய பிளானை போட்ட 'தளபதி' - வெளியான தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News