IPL Brand Value: 19வது ஐபிஎல் தொடர் வரும் 2026ஆம் ஆண்டின் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதுவரை 18 சீசன்கள் நடைபெற்றுள்ளன. சிஎஸ்கே மற்றும் மும்பை அணி தலா 5 முறையும், கேகேஆர் அணி 3 முறையும் கோப்பையை வென்றன. ஆர்சிபி (2025), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), குஜராத் டைட்டன்ஸ் (2022), ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009) அணிகள் தலா ஒருமுறை நடைபெற இருக்கிறது.
IPL Brand Value: ரூ.21,576 கோடி இழப்பு
கடந்த 18 ஆண்டுகளில் ஐபிஎல் மெகா வளர்ச்சியை அடைந்திருந்தாலும், கடந்த 2024ஆம் ஆண்டின் பிராண்ட் மதிப்பு, 2025ஆம் ஆண்டில் 20% வீழ்ந்திருக்கிறது. 2024ஆம் ஆண்டில் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.79 லட்சம் கோடியாகும். 2025ஆம் ஆண்டில் ஐபிஎல் மதிப்பு 9.6 பில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்திருக்கிறது. அதாவது, ரூ.86,291 கோடியாகும். மொத்தம் ரூ.21,576 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.
IPL Brand Value: ஐபிஎல் பிராண்ட் மதிப்பு சரிய என்ன காரணம்?
Breand Finance நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரின் பிராண்ட் மதிப்பு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டபோது, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டன. கடைசிக் கட்ட லீக் போட்டிகளும், பிளே ஆப் சுற்றுப் போட்டிகளும் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. வீரர்கள் விடுதிரும்பினர். 2 வாரங்களுக்குள் மீண்டும் ஐபிஎல் தொடங்கியது. ஆனால், இது ஐபிஎல் தொடரை பாதித்திருக்கிறது.
அதேநேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை மட்டும் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு சரிய ஒரே காரணம் என அர்த்தமல்ல. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஒவ்வொரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்தன. முக்கிய வீரர்கள் இடமாறினார்கள். அதுவும் பாதிப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதனாலேயே ஐபிஎல் நிர்வாகத்திற்கும், பிசிசிஐக்கும் ரூ.21,576 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
IPL Brand Value: ஆர்சிபியை முந்திய மும்பை
மேலும், News9 வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஆர்சிபியின் மொத்த பிராண்ட் மதிப்பு 10% வீழ்ச்சி அடைந்து 105 மில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது, அதாவது இந்திய மதிப்பில் ரூ.94.35 கோடியாகும். ஆர்சிபி அணி ஐபிஎல் வரலாற்றில் அதன் முதல் கோப்பையை வென்றிருந்தாலும், கோப்பையை வென்ற அடுத்த நாளே பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த கூட்டநெரிசல் அசம்பாவிதம், அந்த அணிக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இதனாலும் அதன் பிராண்ட் மதிப்பு சரிந்திருக்கலாம். இதன்மூலம், அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணியாக மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு 108 மில்லியன் அமெரிக்க டாலராகும், இந்திய மதிப்பில் ரூ.97.03 கோடி ஆகும்.
IPL Brand Value: சிஎஸ்கேவின் பெரிய சரிவு
ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு மட்டுமின்றி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவின் பிராண்ட் மதிப்பும் சரிந்துள்ளது. சிஎஸ்கேவின் பிராண்ட் மதிப்பு 24% சரிந்துள்ளது. 93 மில்லியன் அமெரிக்க டாலராக குறைந்திருக்கிறது, இந்திய மதிப்பில் ரூ.83.57 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற பின், 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே ஆப் கூட சிஎஸ்கே செல்லவில்லை. மேலும், 2025 சீசனில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே கடைசி இடத்தில் நிறைவுசெய்ததும் அதன் பிராண்ட் மதிப்பு சரிவதற்கு முக்கிய காரணமாகும்.
IPL Brand Value: பிற காரணிகள்
இதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் பிராண்ட் மதிப்பு முறையே 35%, 34%, 33% அளவிற்கு குறைந்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது, அதுவும் 2% அதிகரித்திருக்கிறது. மேலும், ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் பல நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. இதனால், ஐபிஎல் தொடரின் விளம்பர வருவாயில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் இணைப்பு மூலமும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். ஐசிசி போட்டிகளை ஒளிப்பரப்பியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் ஜியோ ஹாட்ஸ்டார் அதன் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | IPL மினி ஏலத்தில்... இந்த 5 கீப்பர்களுக்கு 'செம' டிமாண்ட் - யார் யார் பாருங்க?
மேலும் படிக்க | சிஎஸ்கே வீரரை குறிவைக்கும் டெல்லி! ஏலத்தில் தட்டி தூக்க மெகா திட்டம்!
மேலும் படிக்க | மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் இளம் வீரர்! சீக்ரெட்டை உடைத்த அஸ்வின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









