)
Digvesh Rathi: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. 27 கோடிக்கு ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்து இருந்தாலும், இரண்டு போட்டிகள் தவிர வேறு எந்த போட்டியிலும் அவர் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் லக்னோ அணி பிளேஆப் செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இருப்பினும் சில வீரர்கள் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அவர்களில் ஒருவர் திக்வேஷ் ரதி. கிட்டத்தட்ட சுனில் நரேன் போன்ற பவுலிங் ஆக்சன் கொண்ட இவர் ஐபிஎல்லில் முதல் போட்டியில் இருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய ஒரு உள்ளூர் தொடரில் 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார் திக்வேஷ் ரதி. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா திக்வேஷ் ரதியை பாராட்டி உள்ளார். 5 பந்துகளில் ஒரு ஹாட்ரிக் உட்பட 3 போல்ட் மற்றும் 2 எல்பிடபிள்யூ எடுத்துள்ளார். ""ஒரு உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5க்கு 5 விக்கெட்டுகள் எடுத்த காட்சியை தற்செயலாகக் கண்டேன். ஐபிஎல் 2025ல் லக்னோ அணிக்காக அவரை ஒரு பிரேக்அவுட் ஸ்டாராக மாற்றிய திறமையின் ஒரு பார்வை இது" என்று சஞ்சீவ் கோயங்கா அவரை பாராட்டியுள்ளார்.
Stumbled upon this clip of Digvesh Rathi taking 5 in 5 in a local T20 game. Just a glimpse of the talent that made him a breakout star for @LucknowIPL in IPL 2025. pic.twitter.com/i8739cjxpk
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) June 16, 2025
திக்வேஷ் ரதி
இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூபாய் 30 லட்சத்திற்கு அடிப்படை விலையில் திக்வேஷ் ரதியை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி. விக்கெட் எடுத்தவுடன் தனது 'நோட் புக் செலிப்ரேஷன்' மூலம் பலரையும் கவர்ந்துள்ளார் திக்வேஷ் ரதி. இதற்காக அவருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து போட்டிகளில் அதையே தொடர்ந்தார். இதனால் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறி உள்ளனர்.
25 வயதாகும் திக்வேஷ் ரதி 13 போட்டிகளில் விளையாடிய மொத்தமாக 8.25 எகனாமி ரேட்டில் 14 விக்கெட்களை எடுத்துள்ளார். கடினமான நேரங்களில் அணிக்கு விக்கெடுகளை எடுத்துக் கொடுத்தும் ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தும் உதவியுள்ளார். சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இருந்தவருக்கு விரைவில் இந்திய டி20 அணையிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ