)
IPL Retentions 2026 Live Streaming Details: 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறுவது வழக்கம்.
ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும். இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலம் நடத்தப்படும். மெகா ஏலம் என்றால், சில வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள இயலும். மினி ஏலம் என்றால் உங்களுக்கு தேவையெனில் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம். அந்த வகையில், கடந்த 2025 சீசனுக்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், 2026 சீசனுக்கு முன் மினி ஏலம் நடத்தப்பட இருக்கிறது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிடும். இதன்மூலம், ஒவ்வொரு அணியிலும் இருந்து மினி ஏலத்திற்கு எந்தெந்த வீரர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்?, ஒவ்வொரு அணியும் மினி ஏலத்திற்கு எவ்வளவு தொகையுடன் வரும்? என்ற விவரங்களையும் இன்றே தெரிந்துகொள்ளலாம். இன்று மதியம் 3 மணிக்குள் அணிகள் தங்களின் பட்டியலை சமர்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IPL Retentions 2026: யாரிடம் அதிக தொகை இருக்கும்?
ஒரு அணியில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் மட்டுமே இருக்க முடியும். அதேநேரத்தில், மொத்த வீரர்களின் கூட்டு சம்பளத் தொகை ரூ.120 கோடியாக இருக்க வேண்டும். எத்தனை வீரர்களை விடுவிக்கிறார்களோ அதற்கேற்ப ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகை மாறுபடும். அதிக வீரர்களை விடுவிக்கும் அணிக்கு பர்ஸ் தொகையும் அதிகமாக இருக்கும். விடுவிக்கும் வீரர்களின் மதிப்பை பொருத்தும் பர்ஸ் தொகை மாறும். இந்த முறை சிஎஸ்கே அல்லது கேகேஆர் அணி அதிக பர்ஸ் தொகையுடன் மினி ஏலத்திற்கு வரும்.
இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரரை தக்கவைக்கிறது மற்றும் விடுவிக்கிறது என்ற விவரத்தை ரசிகர்கள் அறிய IPL Retention நிகழ்ச்சி ஒளிப்பரப்பட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்கள் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளிக்கலாம். மொபைல் மற்றும் ஓடிடி தளங்களில் பார்க்க விரும்புபவர்கள், Jio Hotstar மூலம் கண்டுகளிக்கலாம். ஆனால் தொலைக்காட்சி சேனல்களுக்கும், ஓடிடி தளத்திற்கும் சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
ஐபிஎல் அணிகள் தங்களின் பட்டியலை மதியம் 3 மணிக்குள் பிசிசிஐ-யிடம் தெரிவிக்கும் நிலையில், மாலை 5 மணிக்கு நேரலை நிகழ்ச்சி தொடங்கும். மாலை 5 மணிவரை இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அணிகளின் அதிகாரப்பூர்வ X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் நீங்கள் அவர்களின் தக்கவைப்பு பட்டியலை தெரிந்துகொள்ளலாம். IPL இணையதளம், X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இது மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் அணிகள் தக்கவைப்பு பட்டியலை அறிந்துகொள்ளும் வகையில், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகமும் IPL Retentions நேரலை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சியை நீங்கள் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இலவசமாக இன்று மாலை 5.30 மணிமுதல் நேரலையில் காணலாம். கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் உடன் நமது நெறியாளர் நடத்தும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், IPL Retention குறித்து விரிவாக அலசி ஆராயப்படும். இதில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் கருத்துகளையும் நீங்கள் கமெண்ட்ஸ் மூலம் பதிவிடலாம். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு எங்கள் வல்லுநர்கள் நேரலையில் பதில் அளிப்பார்கள்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ