ஐபிஎல் 2026: முக்கிய வீரர்களை கழட்டிவிடும் அணிகள்.. யாரெல்லாம் பாருங்க!

Key players that IPL teams Release Before Mini Auction: ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், விடுக்கப்படும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Oct 13, 2025, 01:35 PM IST
ஐபிஎல் 2026: முக்கிய வீரர்களை கழட்டிவிடும் அணிகள்.. யாரெல்லாம் பாருங்க!

Key players that IPL teams Release Before Mini Auction: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இத்தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 13-15 தேதிகளில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த சூழலில், ஐபிஎல்லின் ஓவ்வொரு அணிகளும் சில வீரர்களை தங்களது அணியில் இருந்து விடுவித்து வேறு வீரர்களை ஏலத்தில் எடுக்க முற்படும். இதில் சில முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி ஸ்டார் பிளேயர்களாக இருந்தவர்களை கழட்டிவிடும் அணிகள் ஏன்னென்ன? அந்த வீரர்கள் யாரெல்லாம் என்பதை இத்தொகுப்பின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source

சென்னை சூப்பர் கிங்ஸ்: விடுவிக்கப்படும் முக்கிய வீரர்கள்

தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. சாம் கரன் மற்றும் டெவன் கான்வே ஆகியோரும் விடுவிக்கப்படக்கூடிய வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களை விடுவிக்கும் சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களையும் முக்கிய பந்து வீச்சாளர்களையும் அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், ஐபிஎல்லில் இருந்து மூத்த வீரர் ஆர். அஸ்வின் ஓய்வு பெற்றதன் மூலம், சிஎஸ்கே தனது ஏலப் பணத்தில் ரூ.9.75 கோடியைச் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயஸ்: விடுவிக்கப்படும் முக்கிய வீரர்கள்

கடந்த ஐபிஎல் 2025 தொடரின் இறுதி பகுதியில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக விரும்புவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இவரை தவிர்த்து ஸ்பின்னர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

டெல்லி கேபிடல்ஸ்: விடுவிக்கப்படும் முக்கிய வீரர்கள் 

டெல்லி கேபிடல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரை அந்த அணி கடந்த ஆண்டு ரூ. 10 கோடிக்கு வாங்கியது. ஆனால் அவரை போட்டியில் பயன்படுத்தவில்லை. இந்த சூழலில் இவரை டெல்லி அணி விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விடுக்கப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: விடுவிக்கப்படும் முக்கிய வீரர்கள் 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2026க்கான அணி மாற்றங்களைத் திட்டமிடுவதால், வீரர் ஆகாஷ் தீப்பை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த அணியின் பந்து வீச்சு பெரிய பலமாக இல்லாததால், எல்எஸ்ஜி அணி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கும் மேலும், ஃபினிஷராக இருக்கும் டேவிட் மில்லரையும் அந்த அணி கழட்டிவிட இருப்பதாக கூறப்படுகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: விடுவிக்கப்படும் முக்கிய வீரர்கள் 

வெங்கடேஷ் ஐயர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த சூழலில், அவர் ஐபிஎல் 2026 தொடருக்கு முன்பாக மினி ஏலத்தின்போது கழட்டிவிடப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக வேறொரு அதிரடி வீரரை அந்த அணி எடுக்க திட்டமிடலாம் என தெரிகிறது. 

மேலும் படிக்க: India vs Australia: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பங்கமாய் கலாய்த்த பாட் கம்மின்ஸ்!

மேலும் படிக்க: அஷ்வினுக்கு பதில் யார்? சென்னையில் முகாமிடும் தோனி, ருதுராஜ், பிளெமிங்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News