தோனி ரசிகர்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளில் தோனிக்கான ஆதரவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் படையாகவே இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தைக் கடந்து லக்னோ, அகமதாபாத், மும்பை என எல்லா இடத்திலும் சிஎஸ்கே விளையாடும்போது தோனி ரசிகர்களே மைதானத்தை ஆக்கிரமிக்கின்றன. இந்த ஆண்டுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது என தகவல் பரவியதால் தோனி விளையாடும்போது ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என பேரார்வத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் தன்னுடைய ஓய்வு குறித்த தகவலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா, ஓய்வு குறித்து தோனி தன்னிடம் வெளிப்படையாக தெரிவித்ததை முதன்முறையாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க | IPL 2023: ராஜஸ்தான் தோல்வியால் 10 அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு : சன்ரைசர்ஸ் குதூகலம்


டேனி மோரிசன் கேள்வி


கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ் போட வந்த தோனியிடம் தொகுப்பாளர் டேனி மோரிசன் அவரின் ஐபிஎல் ஓய்வு குறித்து மறைமுகமாக கேட்டார். அதாவது, உங்களுடைய கடைசி ஐபிஎல் தொடர் எப்படி இருக்கிறது?. அதனை எப்படி அனுபவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே அந்த கேள்விக்கு பதில் அளித்த தோனி, நான் எங்கே ஓய்வு பெறுகிறேன் என்று சொன்னேன். நீங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என சிரித்துக் கொண்டே கூறினார். உடனே சுதாரித்துக் கொண்ட டேனி மோரிசன், ரசிகர்களை நோக்கி  தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறவில்லை என்பதை தெரிவித்துவிட்டார். அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என கூறினார். 


சுரேஷ் ரெய்னா விளக்கம்


தோனியே இதனை சொல்லியிருந்தாலும் கொஞ்சம் நெருடலாகவே அந்த வார்த்தைகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா, முதன்முறையாக எக்ஸ்குளூசிவ் தகவலை ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார்.  ஜியோ சினிமாவில் பேசிக் கொண்டிருந்தபோது, தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரெய்னா, அவர் இப்போது ஓய்வு பெற மாட்டார். ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓராண்டு விளையாடுவதாக தெரிவித்துள்ளார் என கூறினார். " நான் தோனியை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போது அவரிடம் எப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற திட்டம் என கேட்டன். சென்னை அணிக்கு இன்னொரு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த பிறகு மேலும் ஓராண்டு விளையாடிவிட்டு ஓய்வு பெறுவேன் என தெரிவித்தார்" என அப்போது ரெய்னா தெரிவித்தார்.


மேலும் படிக்க | கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ