2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?

Most Demand Players In 2026 IPL Mini Auction: 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த 5 வீரர்கள்தான் அதிக போட்டி இருக்கும் என முன்னள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Dec 14, 2025, 01:16 PM IST
  • 2026 ஐபிஎல் மினி ஏலம்
  • அதிக போட்டி இருக்கும் 5 வீரர்கள்
  • யார் யார்?
2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?

2026 ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரின் 19வது சீசன் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக அத்தொடருக்கான மினி ஏலம் நாளை மறுநாள் (டிசம்பர் 16) நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகிறது. முக்கிய வீரர்களை எடுத்து தங்களது அணியை வலுப்படுத்த திட்டம் தீட்டுகின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் மினி ஏலத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி அணிகள் அனைத்தும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த அணியின் லிஸ்ட்டை வெளியிட்டது. 

Add Zee News as a Preferred Source

IPL 2026: அணி மாறிய முக்கிய வீரர்கள் 

இதில் முக்கிய வீரர்கள் சிலர் வெளியேறப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான டிமெண்ட் மினி ஏலத்தில் அதிகம் இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அதேசமயம், சில வீரர்களை டிரேட் மூலம் மற்ற அணிகளிடம் பேசி வாங்கி உள்ளது சில அணிகள். உதாரணத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் முறையின் மூலம் மாறி உள்ளார். அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த முகமது ஷமியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டிரேட் மூலம் வாங்கி உள்ளது. ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றிருக்கிறார். 
2026 IPL Mini Auction: 1040 வீரர்கள் நீக்கம் 

இந்த சூழலில், மினி ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 1390 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இந்த வேளையில் 10 அணிகளுடனும் ஆலோசித்து இறுதி பட்டியலை வெளியிட்டனர். இந்த பாட்டியலில் 1040 வீரர்களை நீக்கிவிட்டு 350 வீரர்களை மாடுமே ஏலத்தில் இடம்பெற செய்துள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் இந்த மினி ஏலத்தில் எந்த வீரர்கள் அதிக விலைக்கு போவார்கள் என்று கணித்து ஒரு 5 வீரர்களை கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் இர்பான் பதான். 

Most Demand Players In 2026 IPL Mini Auction: இர்பான் பதான் கணிப்பு 

அவர் கூறியதாவது, ஆகாஷ் தீ, கேமரூன் கிரின், ஆண்ரிச் நோர்க்கியா, மதீஷா பதிரானா, ஆகாஷ் மதுவால் ஆகிய 5 வீரர்களுக்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என இர்பான் பதான் கணித்துள்ளார். 

CSK IPL Mini Auction Plan: சிஎஸ்கே அணி எந்த வீரருக்கு போட்டி போடும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா இடத்தில் ஒரு வீரர் தேவை. அதேபோல் ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்ட்ருக்கு முயற்சி செய்யும் என தெரிகிறது. ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தனது அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதீஷா பதிரானாவை மீண்டும் எடுக்க முயற்சிக்கும். மேலும், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை எடுக்க நிச்சயம் சிஎஸ்கே முயற்சிக்கும் என கூறப்படுகிறது. இதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும் என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: இன்று பிறந்தநாள் கொண்டாடும் குல்தீப் யாதவ்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு - முழு விவரம்!

மேலும் படிக்க: CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News