சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2025ல் மிகவும் மோசமாக விளையாடியது. முதல் அணியாக தொடரைவிட்டு வெளியேறியது. இதனால் வரக்தியடைந்த ரசிகர்கள், கடுமையாக சாடியும் வந்தனர். பந்து வீச்சு சரியில்லை, பேட்டிங் சரியில்லை என்று. இச்சூழலில், ஐபிஎல் 2025 தொடரின் இறுதி கட்டத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணையப்போவதாக கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை அணியில் இருந்து வீரர்களை விட்டுக்கொடுப்பதாக கூறப்படவில்லை. ஆனால் தற்போது, சஞ்சு சாம்சனை வாங்க, சிவம் துபே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கு வருவதும், இரண்டு வீரர்கள் சிஎஸ்கேவை விட்டு வெளியே செல்வதும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஒருவேளை இந்த முடிவை சென்னை அணி எடுத்தால், அது மிகவும் முட்டாள்தனம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியுடனான சஞ்சு சாம்சன் பிரச்சனை
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை பார்க்கும்போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சஞ்சு சாம்சனுக்கும் இருக்கும் பிரச்சனை அவர்களின் செயல்பாட்டின் மூலம் வெளிப்பட்டது. ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்படி எதுவும் இல்லை என கூறி இருந்தார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக்க முயற்சி செய்வதாகவும், அதற்கு ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவிப்பதாகவும், இதனால் சஞ்சு சாம்சனுடன் உரசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆர்.எஸ். பிரசன்னாவின் கருத்து
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான ஆர். எஸ். பிரசன்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இடது கை பேட்ஸ்,மேன் மற்றும் சூழற்பந்து வீச்சாளர் ஒருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக கூறி இருக்கிறார். அந்த இரண்டு வீரர்கள் சிவம் துவே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினும் தான் என ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், அப்படியான ஒரு முடிவை சிஎஸ்கே அணி எடுத்தால், அது மிகவும் முட்டாள்தானமான ஒரு விஷயம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 2025 ஐபிஎல் சீசனில் சில போட்டிகளில் ரன்களை குவித்தவர் சிவம் துபேதான், அவர் 14 இன்னிங்ஸ்களில் 357 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன்பான ஐபிஎல் தொடர்களிலும் அவர்தான் மிடில் ஆர்டரில் ரன்களை சேர்த்திருந்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியை விட்டு சிவம் துபேவை அனுப்பக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









