Madurai Velammal Cricket Stadium: தமிழ்நாட்டின் கோவில் நகரமாக அறியப்படும், தென்மாவட்டமான மதுரையில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே இருக்கக்கூடிய 11.5 ஏக்கர் நிலத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த பிரம்மாண்ட மைதானத்தை கட்டியிருக்கிறது.
மதுரை மைதானத்தில் இருக்கும் வசதிகள்
சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) இன்று திறந்துவைக்க உள்ளார். மதுரையில் உள்ள சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே இருக்கக்கூடிய 11.5 ஏக்கர் நிலத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த பிரம்மாண்ட மைதானத்தை கட்டியிருக்கிறது.
இதில் எக்கச்சக்க பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஜிம், ஓய்வறை, பார்க்கிங், மருத்துவ வசதிகள் கொண்ட அறை, ஆம்புலன்ஸ் வசதிகள் ஆகியவை அனைத்தும் இதில் உள்ளன. மழை காரணமாக ஆட்டம் தாமதம் ஆகக்கூடாது என்பதற்காக, பெங்களூரு மைதானத்தைப் போல் சிறந்த வடிகால் வசதி செய்யப்பட்டு, மைதானத்தைச் சுற்றி 5 அடி ஆழத்தில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று இராட்சத ஒளி கோபுரத்தை அமைத்துள்ளனர்.
எவ்வளவு பேர் அமரலாம்?
முதற்கட்டமாக 7,300 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில், பார்வையாளர்கள் கேலரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மைதானம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகள் சுமார் 197 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முதலில் இந்த போட்டிகள் நடைபெறும்...
இந்த மைதானம் குறித்து கிரிக்கெட் பயிற்சியாளரான லட்சுமி நாராயணன் பேசியதாவது, "இதுபோன்ற நல்ல மைதானத்தை திறந்தாலும் கூட பெரிய போட்டி இங்கு நடைபெறாது. அதற்கு முன் அங்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகள் அங்கு நடைபெற வேண்டும். U19, U23, போட்டிகள், மல்டி டே போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் என அனைத்து பார்மட்டிலும் தொடர்ச்சியாக ஓராண்டுகளுக்கு போட்டிகள் நடைபெற வேண்டும். அதைத் தொடர்ந்து, சையத் முஷ்டாக் அலி, டிஎன்பிஎல், ரஞ்சி போட்டிகள் நடைபெற வேண்டும். இங்கு போட்டிகள் எப்படி நடக்கிறது, என்ன மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது என்பதை பார்ப்பார்கள். அதன்பிறகே ஐபிஎல் போன்ற பெரிய போட்டிகள் இங்கு நடைபெற தொடங்கும்.
ஐபிஎல் போட்டிகள் மதுரையில் நடக்குமா?
தமிழ்நாடு கிரிக்கெட் எந்தளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது இதில் தெரிகிறது. மதுரையில் தற்போது வருகிறது. இப்போதே, சேலம், கோவை போன்ற ஊர்களில் சிறப்பான மைதானங்கள் உள்ளன. தொடர்ந்து இதுபோன்ற அமைப்புகள் கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்வது சிறப்பான ஒன்றாகும். இது இளந்தலைமுறை வீரர்களுக்கு வரப்பிரசாதம். 30-40 ஆண்டுகளுக்கு முன் மோசமான உட்கட்டமைப்பில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஆனால் இப்போது சிறுவயதில் இருந்த வீரர்கள் நல்ல உட்கட்டமைப்புடன் கூடிய மைதானங்களில் பயிற்சி எடுக்க முடியும்" என்றார். இதன்மூலம் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெற வாய்ப்பில்லை. இருப்பினும், 2-3 ஆண்டுகளில் அதற்கு இந்த மைதானம் முழுமையாக தயாராகும் என கூறலாம்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இடமில்லை! ஓய்வை அறிவிக்கும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்?
மேலும் படிக்க |IND vs WI: 2வது டெஸ்ட் போட்டியில் இந்த 3 வீரர்களுக்கு ஓய்வு! அணியில் அதிரடி மாற்றம்!
மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடருடன் ஓய்வை அறிவிக்கும் ரோஹித் - விராட்? முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









