தூக்கிவீசப்படுவாரா குல்தீப் யாதவ்... நம்பிக்கை இழந்த கில், கம்பீர் - வீடியோவால் பரபரப்பு

Kuldeep Yadav: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் குல்தீப் யாதவ் இன்று வெறும் 6 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெவிலியனில் கம்பீர் உடன் நடத்திய உரையாடலின் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 18, 2026, 05:37 PM IST
  • குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 6 ஓவர்களை வீசினர்.
  • நிதிஷ் குமார் 8 ஓவர்களை வீசினார்.
  • மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர்.
தூக்கிவீசப்படுவாரா குல்தீப் யாதவ்... நம்பிக்கை இழந்த கில், கம்பீர் - வீடியோவால் பரபரப்பு

India vs New Zealand 3rd ODI, Kuldeep Yadav: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி இன்று (ஜன. 18) இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது.  1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை பெற்றிருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும்.

Add Zee News as a Preferred Source

IND vs NZ 3rd ODI: மிட்செல், பிலிப்ஸ் சதம்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளத்தில் அதிக ரன்களை குவிக்கலாம் என்பதால் சேஸிங் செய்வதற்கே சாதகமாக இருக்கலாம் என்பதால் சுப்மான் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் முதல் பேட்டிங் செய்த அணியே இதுவரை இந்த மைதானத்தில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சில், தொடக்கத்திலேயே இரு விக்கெட்டை நியூசிலாந்து இழந்தது. டெவான் கான்வே 5, ஹென்றி நிக்கோல்ஸ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வில் யங் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் ஆகியோர் 219 ரன்களை குவித்தது. கிளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர் அடக்கம். டேரில் மிட்செல் இந்த போட்டியிலும் சதம் அடித்தார், தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அவர் அடித்திருக்கிறார் இந்தியாவுக்கு எதிரான கடைசி 5 இன்னிங்ஸில் அவர் 4 சதங்களை பதிவு செய்துள்ளார், மற்றொரு போட்டியிலும் 85 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. டேரில் மிட்செல் இன்று 131 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர் என 137 ரன்களை அடித்திருந்தார்.

IND vs NZ 3rd ODI: ஜடேஜா, குல்தீப் மீது நம்பிக்கையில்லையா?

டேரில் மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி 13வது ஓவரில் இருந்து 44வது ஓவர் வரை இந்த ஜோடி களத்தில் இருந்தது. இன்று சுப்மான் கில்லின் கேப்டன்ஸி அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. 30வது ஓவரில்தான் ஜடேஜா அவரது முதல் ஓவரை வீசினார். அதற்கு முன் வரை குல்தீப் யாதவ் 3 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார், அதில் 18 ரன்களை கொடுத்திருந்தார். ஜடேஜாவுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்களை இருவருமே விளையாடுவார்கள் என்பதால் கில் அவரை களமிறக்கவில்லை என்பதை கூட புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால்,  குல்தீப் யாதவுக்கு எதிராக பிலிப்ஸ் தடுமாற வாய்ப்பிருக்கும் நிலையில் அவரை பதுக்கியது பெரும் கேள்வியை எழுப்பியது எனலாம். குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் வல்லமை கொண்டவர். எனவே அவருக்கு மேலும் இரண்டு - மூன்று ஓவர்களை மிடில் ஓவர்களிலேயே கில் கொடுத்திருக்கலாம். ஆனால் 21வது ஓவர்களுக்கு பிறகு 39வது ஓவரில்தான் பந்துவீச வந்தார். அதுவும் அவர் வீசிய 41வது ஓவரில் 19 ரன்களை கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

IND vs NZ 3rd ODI: கம்பீர் - குல்தீப் வீடியோ வைரல்

21வது ஓவரை வீசிய பின்னர் அவர் உடனே பெவிலியன் திரும்பினார். அப்போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு குல்தீப் யாதவுக்கும் இடையே தீவிரமான உரையாடல் நடந்ததை பார்க்க முடிந்தது. அதன்பிறகே அவர் நீண்டநேரம் பந்துவீசவில்லை. ஒருவேளை குல்தீப் யாதவ் மீது கேப்டனும், அணி நிர்வாகமும் அதிருப்தியில் இருந்திருக்கலாம் என்றும் அதனாலதான் அவர் இன்று குறைந்த ஓவர்கள் பந்துவீசினார் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 6 ஓவர்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 8 ஓவர்களையும் வீசியிருக்கிறார்கள். அதாவது 20 ஓவர்களை மூன்று பந்துவீச்சாளர்கள் இணைந்து வீசியிருக்கிறார்கள். மீதம் இருந்த 30 ஓவர்களை மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் தலா 10 ஓவர்கள் வீசினர். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களை அடித்துள்ளது. 

மேலும் படிக்க | IND vs NZ: தொடரை இழந்தால் இப்படி ஒரு சோகமா? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்!

மேலும் படிக்க | U19 மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்ற 4 இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

மேலும் படிக்க | விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News