ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

RCB Ban: 18 வருடம் கழித்து ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த அணி ஒரு வருடம் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 9, 2025, 05:09 PM IST
  • ஆர்சிபி அணியை தடை செய்ய வாய்ப்பு
  • பிசிசிஐயின் முடிவு என்ன?
ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்சிபி அணியின் 18 வருட கனவு என்பதால், வெற்றியை விமர்சையாக கொண்டாட முடிவு செய்து பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 

Add Zee News as a Preferred Source

அதாவது பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. அதையும் மீறி ஆர்சிபி நிர்வாகம் நிகழ்ச்சியை நடத்தியது. அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என சொல்லப்படுகிறது. 

சுமார் 3 லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் காயமடைந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அசம்பாவிதத்திற்கு ஆர்சிபி அணியே காரணம், போலீசார் அனுமதி மறுத்தும் ஆர்சிபி அணி நிர்வாகம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளது என பலரும் குற்றம் சாட்டினர். 

இதையடுத்து ஆர்சிபி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி 4 பேரை கர்நாடக அரசு கைதும் செய்தது. இந்த அசம்பாவிதத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் காரணம் என்றால், கர்நாடக அரசும் ஒரு காரணம். பெங்களூரு போன்ற போக்குவரத்து மிகுந்த நகரில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது கடினம் என்று கர்நாடக அரசு மறுத்திருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் தான், நிகழ்ச்சி குறித்து எங்களுக்கு தெரியும் என கர்நாடக அரசு நொண்டி சாக்கு சொல்கிறது. 

1 வருடம் தடை செய்ய வேண்டும்

இப்படியான ஒரு கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், #BanRCB, RCBStampede போன்ற ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, இவ்வளவு பெரிய அசாம்பாவிதத்திற்கு காரணமான ஆர்சிபி அணியை ஒரு வருடம் தடை செய்ய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். உலகளவில் விளையாட்டு அமைப்புகள் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய கிளப்புகளை ஏற்கனவே தண்டித்த வரலாற்றி இருக்கிறது. அதேபோல் ஆர்சிபி அணி மீது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? 

நாட்டைய உலுக்கும் மிகப்பெரிய அசாம்பாவிதத்தை ஏற்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழும்பி உள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணி மீது தடை அல்லது அபராதம் போன்ற ஏதாவது ஒரு நடவடிக்கை கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. எதுவாக இருந்த ஆர்சிபி அணியால் இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. மேலும், 17 வருடமாக ஒரு மிகப்பெரிய அணி கோப்பையை வெல்லவில்லை என்ற கறையை தற்போது போக்கிய நிலையில், அந்த அணி மீது மற்றொரு மிகப்பெரிய கறை விழுந்துள்ளது என்பதே உண்மை.  

மேலும் படிங்க: சுனிதா வில்லியம்ஸை போல்... விண்வெளிக்கு பறக்கும் அடுத்த இந்தியர் - யார் இந்த சுபான்ஷு சுக்லா?

மேலும் படிங்க: ரிஷப் பண்டுக்கு காயம்... இந்திய அணிக்கு பெரிய அப்செட்... ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

About the Author

Trending News