)
India vs south Africa Jasprit Bumrah Likely To Be Rested: இந்தியாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கவுகாத்தி நகரத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி போராடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெற இருக்கிறது.
Jasprit Bumrah: ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு?
ஓடிஐ தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு இன்று (நவம்பர் 23) வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வந்ததால், பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதால், அதற்கும் போதிய ஓய்வு வழங்கப்படுகிறது.
India vs South Africa: சுப்மன் கில் & ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை
முதல் டெஸ்ட் போட்டியின்போது கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக வெளியேறிய சுப்மன் கில், டெஸ்ட் தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு நரம்பில் பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்த தொடரிலும் இடம் பெற மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இடம் பெற மாட்டார் என தெரிகிறது.
India vs South Africa: பும்ராவுக்கு பதில் யார்?
பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இளம் பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி செல்லும் நிலையில், அவர்களது செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
- இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நவம்பர் 30 முதல் அடுத்த மாதம் 6 வரை நடைபெற இருக்கிறது.
- இத்தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பிருக்கிறது.
- கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றும் கே.எல். ராகுல் மற்றும் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியை வழிநடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ