பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!

ஜஸ்பிரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை துணை கேப்டன் பதவியில் இருந்தே பிசிசிஐ நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 5, 2025, 01:59 PM IST
  • ஐஸ்பிரித் பும்ரா டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்
  • இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது
  • இந்த தொடர் முதல் பும்ரா துணை கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை
பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான கேப்டன் ரோகித் சர்மாவாக இருப்பார் என முன்னதாகவே தகவல் வெளியாகின. 

Add Zee News as a Preferred Source

ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிந்ததுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2026 உலக கோப்பை வரை தொடர வாய்ப்புள்ளதாக கூறினார். எனவே அதுவரை ரோகித் சர்மாவே கேப்டனாக தொடருவார் என கூறப்பட்டு வருகிறது. இச்சூழலில் அடுத்த கேப்டனை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. 

இந்த நிலையில்தான், துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா முக்கியத்துவம் பெறுகிறார். ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பதால், அவரையே கேப்டனாக பிசிசிஐ நியமிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரை துணை கேப்டன் பதிவில் இருந்தே நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அவர் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதுதான் என கூறப்படுகிறது. 

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் அதிகம் ஏற்படும். அதிலும் பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷனுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். உதாரணத்திற்கு கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில் அவர் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாட முடியாத சூழல் நிலவியது. அதையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடினார். ஆனால் அத்தொடரின் முடிவிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாமல் போனது. ஐபிஎல் தொடரிலும் இரண்டு வாரங்கள் கழித்தே இணைந்தார். இப்படி அடிக்கடி காயம் ஏற்படுவதால்தான் பிசிசிஐ அவரை துணை கேப்டன் பதவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை துணை கேப்டனாக நியமிக்கலாம் என தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஐபிஎல் முடிந்தவுடன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.    

மேலும் படிங்க: வன்ஷ் பேடிக்கு காயம்... CSK-வில் அப்போ இந்த வீரருக்கு வாய்ப்பு வேணும்!

மேலும் படிங்க: இந்த முக்கிய வீரரை கழட்டிவிடும் சன்ரைசஸ்? தட்டி தூக்கும் சிஎஸ்கே?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News