ஐபிஎல் 2025 போட்டிகள் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுக்க பல முக்கியமான போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகின்றனர். இந்த போட்டி ஆர்சிபி அணியை தாண்டி மும்பைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தங்களை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினர். அதன் பிறகு நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தனர். இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
அணிக்கு திரும்பிய பும்ரா
மும்பை அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர்களது காம்பினேஷன் சரியாக அமையவில்லை. காரணம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இதுவரை நடந்த போட்டியில் விளையாடவில்லை. தற்போது காயம் முழுவதும் குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளார். இது ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.
மும்பை அணியின் பிளேயிங் 11
ரியான் ரிக்கல்டனுடன் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் இறங்குவார். அவரைத் தொடர்ந்து வில் ஜாக்ஸ் இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம். பிறகு சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நமந்தீர் மற்றும் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ராவும் சுழற்பந்து வீச்சாளர்களாக விக்னேஷ் புதூர் மற்றும் மிச்சல் சான்டனர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. பும்ரா அணிக்கு திரும்பியுள்ளது ஒட்டுமொத்த அணியையும் பலம் வாய்ந்த ஒன்றாக மாற்றி உள்ளது. இந்த சீசன் தொடங்கியதிலிருந்து ரோகித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவும் மும்பை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசன் தொடங்கியதில் இருந்து பலம் வாய்ந்த ஒரு அணியாக கருதப்படுகின்றனர். இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஆர்சிபி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் பலமாய்ந்ததாக உள்ளதால் இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் படிங்க: சிஎஸ்கே போட்டிக்கு பின்... டெல்லியிடம் இருந்து கழண்டுகொண்ட பீட்டர்சன் - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









