உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த 'WWE ஜாம்பவான்' ஜான் சீனா (John Cena), தனது 25 ஆண்டுகால மல்யுத்த சாம்ராஜ்யத்திற்கு விடைகொடுக்கத் தயாராகிவிட்டார். டிசம்பர் 14ம் தேதி இன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் 'WWE சாட்டர்டே நைட் மெயின் ஈவென்ட்' நிகழ்ச்சியில், தற்போதைய ஹெவிவெயிட் சாம்பியனான குந்தரை எதிர்த்து தனது இறுதி போட்டியில் களமிறங்குகிறார். ஒரு சகாப்தமே முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், ஜான் சீனாவின் சொத்து மதிப்பு மற்றும் அவர் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!
The GOAT.
There will never be another John Cena! pic.twitter.com/8dT8jUQjma
— WWE (@WWE) December 14, 2025
சொத்து மதிப்பு ரூ.680 கோடி
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் மற்றும் தி ஸ்ட்ரீட் போன்ற முன்னணி ஊடகங்களின் அறிக்கையின்படி, ஜான் சீனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் $80 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.680 கோடி) என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் சாதாரண பாடி பில்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜான் சீனா, இன்று ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், WWE-யின் முகமாகவும் உயர்ந்துள்ளார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி WWE ஒப்பந்தங்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமே வருகிறது. 'பீஸ்மேக்கர்' (Peacemaker), 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' (Fast and Furious) போன்ற படங்கள் அவரது சொத்து மதிப்பை எகிற வைத்துள்ளன.
WWE சம்பளம்: ரூ.100 கோடி!
ஜான் சீனா பகுதிநேர வீரராக இருந்தாலும், அவருக்கு வழங்கப்படும் சம்பளம் மலைக்க வைக்கிறது. 2023-ல் $8.5 மில்லியனாக இருந்த அவரது WWE அடிப்படை சம்பளம், தற்போது $12 மில்லியனாக (சுமார் ரூ.100 கோடி) உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்கப்படும் டீ-ஷர்ட், தொப்பி, ரிஸ்ட் பேண்ட் போன்ற பொருட்களின் விற்பனையில் அவருக்கு 5% ராயல்டி கிடைக்கிறது. WWE வரலாற்றில் அதிக மெர்ச்சண்டைஸ் விற்பனை செய்தவர் என்ற சாதனை இவரிடமே உள்ளது. ஒவ்வொரு முக்கிய போட்டியிலும் கலந்துகொள்வதற்காக மட்டும் அவருக்கு கூடுதலாக $500,000 (சுமார் ரூ.4 கோடி) வழங்கப்படுகிறது.
கடைசி போட்டி - என்ன நடந்தது?
- 17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனா, தனது கடைசி போட்டியில் தற்போதைய ஹெவிவெயிட் சாம்பியன் குந்தரை (Gunther) எதிர்கொண்டார்.
- ஆரம்பம் முதலே குந்தரின் கை ஓங்கியிருந்தது. அவரது அசுர வலிமைக்கு முன்னால் ஜான் சீனாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.
- இருப்பினும், தனது டிரேட்மார்க் மூவ்ஸ்களான 'ஃபைவ் நக்கிள் ஷஃபிள்' மற்றும் 'ஆட்டிடியூட் அட்ஜஸ்ட்மென்ட்' (Attitude Adjustment - AA) மூலம் சீனா பதிலடி கொடுத்தார்.
- இறுதியில், குந்தர் தனது வலிமையான 'ஸ்லீப்பர் ஹோல்ட்' மூலம் ஜான் சீனாவை முடக்கினார். அதிலிருந்து தப்பிக்க முடியாத ஜான் சீனா, வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டார்.
கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்
போட்டி முடிந்ததும் மைதானமே நிசப்தமானது. தோல்வியைதழுவினாலும், ஜான் சீனா தனது மல்யுத்த ஷூக்களை கழற்றி ரிங்கின் நடுவே வைத்துவிட்டு, ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக சல்யூட் அடித்தார். "இத்தனை ஆண்டுகளாக உங்களை மகிழ்வித்ததில் பெருமை கொள்கிறேன். நன்றி," என்று கூறிவிட்டுத் திரைக்குப் பின்னால் மறைந்தார். அரங்கில் இருந்த ரசிகர்கள் "Thank You Cena" என்று முழக்கமிட்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். இந்த உணர்ச்சிகரமான தருணத்தை பார்த்துப் பலரும் கண்ணீர் சிந்தினர்.
மேலும் படிக்க: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 3வது டி20: தேதி, நேரம், இடம் மற்றும் நேரலை விவரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









