மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விலகிய நிலையில், மாற்று வீரர்களை மும்பை அணி அறிவித்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 20, 2025, 06:01 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விலகல்
  • மாற்று வீரர்கள் அறிவிப்பு
மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் போர் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என கூறி அட்டவனையும் வெளியிடப்பட்டது. 

அதன்படி மீண்டும் ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினர். இச்சூழலில் பல வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த மூன்று முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பவில்லை. 

வில் ஜாக்ஸ், தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பவில்லை. இவர்கள் மூவருமே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் என்பதால், இவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பாதது மும்பைக்கு இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. அதன்படி, வில் ஜாக்ஸுக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜானி பாரிஸ்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு மும்பை அணியால் ரூ. 5 கோடியே 25 லட்சம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதேபோல் ரியான் ரிக்கில்டனுக்கு பதிலாக ரிச்சர்ட் கிலீசன் என்ற வீரரை சேர்த்துள்ளனர். இவருக்கு ரூ. 1 கோடி கொடுக்க மும்பை அணி முடிவு செய்திருக்கிறது. 

மேலும், ஆல்ரவுண்டர் கார்பின் போஸுக்கு பதிலாக இலங்கை வீரர் ஷரீத் அசலங்காவை மும்பை அணி சேர்த்துள்ளது. இவருக்கு ரூ. 75 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. விளையாடிய 12 போட்டிகளில் 7ல் வெற்றி அடைந்து 14 புள்ளிகளுடன் இருக்கிறது. மீதம் இரண்டு போட்டிகள் உள்ளது. ஒன்று லக்னோ அணியுடனும் மற்றொன்று டெல்லி அணியுடனும் இருக்கிறது. குறிப்பாக டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணியால் செல்ல முடியும். 

மேலும் படிங்க: CSK புள்ளிப்பட்டியலில் முன்னேற இதுதான் ஒரே வழி..

மேலும் படிங்க: திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News