SRH Is Likely To Release Heinrich Klaasen: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக வீரர்களுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அணிகளில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட இருக்கிறது. இதற்கிடையில், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களுக்கு அந்தந்த அணிகளிடம் மற்ற அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sunrisers Hyderabad: ஹென்ரிச் கிளாசெனை விடுவிக்கிறதா?
இந்த நிலையில், காவியா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மினி ஏலத்திற்கு முன் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஹென்ரிச் கிளாசெனை விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாசெனை அந்த அணி விடுவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 23 கோடி கிடைக்கும். அதை வைத்து வேறு ஒரு வீரரை எடுக்கலாம் என்ற எதிர்கால சிந்தனையுடன் இந்த முடிவை அவர்கள் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஹென்ரிச் கிளாசென் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக்கூடியவர். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவக்கூடியவர். இந்த சூழலில், இவரை விடுவிக்கும் ரிஸ்க்கை ஹைதராபாத் அணி எடுக்குமானால், அதற்கு பின்னால் வேறொரு சிறந்த திட்டம் இருப்பதாக தெரிகிறது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் தொடரில், மிகவும் மோசமாக விளையாடியது. சிறந்த வீரர்களை கொண்ட அந்த அணி கடுமையாக சொதப்பியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் 2026 ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் என கூறப்படுகிறது.
ஹென்ரிச் கிளாசென் ஹைதராபாத் அணிக்காக 2023 முதல் 2025 வரை என 3 சீசன்களில் விளையாடி இருக்கிறார். இருப்பினும் இவரை விடுவிக்கும் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் வரவில்லை. ஆனால் விரைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் திட்டம் என்னவென்று தெரிந்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









