கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக்குடன் இருந்த ஒப்பந்தத்தை மீறி இந்தியன் பிரிமியர் லீக்கில் சேர முடிவு செய்ததால், அவருக்கு PSL இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி. இந்த சூழலில், இவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் 2 ஆண்டுகள் தடை செய்து கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிளெஸ்ஸிங் முசரபானி முதலில் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய இரண்டு லீக்களின் ஏலங்களிலும் விற்கப்படவில்லை. ஆனால் பின்னர் அவரை இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் முசரபானி தனது ஒப்பந்தத்தை மீறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக சேர முடிவு செய்து சேர்ந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதட்டங்கள் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி முஸ்தபிசூர் ரஹ்மானின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. இந்த சூழலில், அவருக்கு மாற்றாக ஒரு வெளிநாட்டை வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேகேஆர் அணி கடைசி நேரத்தில் பிளெஸ்ஸிங் முசரபானியை ஒப்பந்தம் செய்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் உடன் இருக்கும் ஒப்பந்தத்தை மீறி, ஐபிஎல்லில் அவர் சேர முடிவெடுத்ததால், அவரை இரண்டு ஆண்டுகளுக்கு PSL தொடரில் விளையாட தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஃபிரான்சைஸ் அடிப்படையிலான லீக்குகளில் தொழில்முறை என்பது பங்கேற்கும் வீரர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையுடன் செயல்படுதை கோருகிறது. முன்னரே ஒரு கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போது, அதனை மீறி மற்றொரு ஒப்பந்தத்தில் ஈடுபடுவது சரியல்ல. இத்தகைய நடத்தையை கண்டுக்காமல் விட்டால், நம்பிக்கைதன்மை, தொழில்முறை ஒப்பந்தங்களில் ஃபிரான்சைஸ்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும் என கூறியதோடு பிளெஸ்ஸிங் முசரபானி இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா வீரர் கார்பின் போஷ் இதுபோன்ற ஒரு ஒப்பந்த மீறுதலில் ஈடுபட்டதால், அவர் ஓராண்டு தடை விதிக்கப்பட்டார். மேலும், இந்த ஆண்டு இலங்கை வீரர் தசுன் ஷனகா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் இதுபோன்ற முடிவுகளை எடுத்ததால், அவர்களுக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு மாற்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த பிளெஸ்ஸிங் முசரபானி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறார். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடாத நிலையில், இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!