கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 24, 2025, 09:42 PM IST
  • கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
  • அவர் விரைவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது
கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். கே.எல். ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்தார். இதனால், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்பதால் கே.எல்.ராகுல் அவரது மனைவியுடன் இருக்க விரும்புவதால், அவர் ஐபிஎல் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் கூறப்பட்டது. 

இன்று (மார்ச் 24) நடைபெற்று பெற்று வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. முன்னதாகவே அவர் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டு வந்தது. இச்சூழலில், இன்று நடைபெறும் போட்டியில் அவர் விளையாடவில்லை. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே ஏமாற்றி வென்றதா? சர்ச்சையில் சிக்கிய ருதுராஜ், கலில்.. பின்னணி என்ன?

இந்த நிலையில், கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சிகரமான செய்திக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்ட கே.எல். ராகுல் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அடுத்த ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் விரைவில் அவர் டெல்லி அணிக்கு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் படிங்க: பேய்க்கும் பேய்க்கும் சண்டை... குஜராத் vs பஞ்சாப் பிளாக்பஸ்டர் போட்டி - பிளேயிங் XI இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News