)
KL Rahul Likely To Lead KKR In IPL 2026: 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் மாதம் 13, 15ல் நடக்க இருக்கும் மினி ஏலமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய வீரர்கள் புதிய அணியில் இணைய இருக்கின்றனர். இந்த சூழலில், மற்றொரு முக்கிய வீரர் ஒருவரும் வேறு அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்ய பல அணிகள் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலை வர்த்தகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேகேஆர் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் சென்ற பின்னர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சறுக்கலை சந்தித்தது. அந்த அணி 14 போட்டிகளில் 5ல் மட்டும் வெற்றி பெற்று தொடரை 8வது இடத்தில் நிறைவு செய்தது. 2024 ஐபிஎல் தொடரை வென்ற அந்த அணிக்கு இது மிகப்பெரிய சறுக்கலாக மாறியது. இதன் காரணமாக அந்த அணி ஒரு தரமான கேப்டனை வர்த்தகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
IPL 2026 KKR Caption: ரூ. 14 கோடிக்கு விலைபோன கே.எல்.ராகுல்
அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை வாங்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. கே.எல். ராகுலால் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விளையாட முடியும் என அந்த அணி நம்புகிறது.
2024 ஐபிஎல் தொடருக்கு பின்னர் மெகா ஏலம் நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2024 பட்டத்தை பெற்றுத் தந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ. 26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு வாங்கியது. இதுபோன்று பல வீரர்கள் மாறினர். ஆனால் அது சில அணிகளுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் வரும் மினி ஏலத்தை குறிவைத்துள்ளனர்.
IPL 2026 KKR Caption: புதிய பயிற்சியாளர்
சமீபத்தின் கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், அந்த அணி கேப்டனாகவும் நல்ல பேட்ஸ்மேனையும் தேடுவதால், அவர்கள் கே.எல்.ராகுலை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான அறிகுறிகள் உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வெளியிட இருக்கிறார்கள், அப்போது தெரிந்துவிடும்.
கே.எல். ராகுல் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 539 ரன்களை சராசரியாக 53.9 மற்றும் 149.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஒரு பேட்ஸ்மேனாக, அணியின் கேப்டனாக மற்றும் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் அனுபவம் பெற்றுள்ளதால், கொல்கத்தா அணி இவரை வாங்க திட்டமிட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். எனவே என்ன மாதிரியான மாற்றங்கள் 2026 ஐபிஎல்லில் நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ