CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!

Chennai Super Kings Latest News: சிஎஸ்கே அணிக்கு ரவி பிஷ்னோய் மற்றும் டேவிட் மில்லை தேவையில்லை என்றும் ஜடேஜாவின் இடத்தை இந்த வீரரால்தான் நிரப்ப முடியும் என்றும் முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Dec 14, 2025, 08:59 AM IST
  • 2026 ஐபிஎல் மினி ஏலம்
  • சிஎஸ்கே இந்த ஆல்-ரவுண்டரை எடுக்க வேண்டும்
  • கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் யோசனை
CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!

CSK IPL Auction Strategy: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக வரும் டிசம்பர் 16ஆம் தேதி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. ரசிகர்களின் இடையேயும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாதிரியான திட்டத்துடன் மினி ஏலத்திற்கு வருகிறது யாரை வாங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளன. 

Add Zee News as a Preferred Source

CSK Sanju Samson: சிஎஸ்கே வந்த சஞ்சு சாம்சன் 

சிஎஸ்கே அணி கடந்த மாதம்  ராஜஸ்தான் ராயலஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சஞ்சு சாம்சனை டிரேட் முலம் வாங்கிக்கொண்டது. அதேபோல் ஆர்ஆர் அணி கேட்டது போல் ரவீந்திர ஜடேஜாவையும் அந்த அணிக்கு விட்டுக்கொடுத்தது. இதனால் ஐபிஎல் வர்த்தகம் மேலும் சூடு பிடித்தது என கூறலாம். சஞ்சு சாம்சனை வாங்க பல அணிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதனை சென்னை அணிதான் வெற்றிகரமாக முடித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் சிஎஸ்கே அணியின் தூனாக அடையாளமாக தெரிந்த ஜடேஹா அந்த அணியில் இருந்து விலகியது அவர்களுக்கு வருத்தமே. இந்த சூழலில்தான், சரி ஜடேஜா போவிட்டார். அவரது இடத்திற்கு சிஎஸ்கே அணி யாரை கொண்டு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

Krishnamachari Srikkanth: கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் யோசனை 

முன்னாள் வீரர்கள் சிலர் அவரது இடத்திற்கு ரவி பிஷ்னோய் சரியான வீரராக இருப்பார் அல்லது டேவிட் மில்லரை சிஎஸ்ஏ அணி தேர்வு செய்யலாம் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், ரவி பிஷ்னோய், டேவிட் மில்லர் ஆகியோர் வேண்டாம் அவர்களுக்கு பதிலாக சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியில் ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் யோசனை கூறி உள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. அங்கு சஞ்சு சாம்சன், ஆயுஸ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் பேட்டிங் பற்றிய கவலை அவர்களுக்கு தேவையில்லை. 

Ravi Bishnoi, David Miller: ரவி பிஷ்னோய், டேவிட் மில்லர் வேண்டாம் 

தற்போது ஜடேஜாவின் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலரும் லியாம் லிவிங்ஸ்டன், ரவி பிஸ்னோய், டேவிட் மில்லை என பேசுகிறார்கள். ஆனால் நான் கூறுவேன், அந்த இடத்திற்கு நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் சரியாக இருப்பார். நான் மட்டும் சிஎஸ்கே நிர்வாகத்தில் இருந்தால் பிரேஸ்வெல்லைதான் எடுப்பேன். அவர் இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் அடித்த சதத்தை எவராலும் மறந்துவிட முடியாது. அவர் ஒரு நல்ல ஃபினிஷர், ஆஃப் ஸ்பின்னரும் கூட. இடது கை பேட்ஸ்மேனான அவர் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பும் திறனும் படைந்தவர். 

Michael Bracewell: ஜடேஜா இடத்திற்கு இவர்தான் சரி 

தோனி போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும்போது பிரேஸ்வெல்லை நிச்சயம் சிறப்பாக விளையாட வைக்க முடியும். நான் ரவி பிஷ்னோய்யை எடுக்க வேண்டும் என நிச்சயம் கூற மாட்டேன். ஏனென்றால் அணியில் ஏற்கனவே ஸ்ரேயாஸ் கோபால் இருக்கிறார். அதேபோல் டெவிட் மில்லரும் தேவையில்லை. அவர் ரன்கள் குவித்து காலம் ஆகிவிட்டது. அதிலும் சென்னை போன்ற பிட்ச் அவருக்கு செட்டே ஆகாது. எனவே பிரேஸ்வெல் சிறந்த வீரராக இருப்பார். பேட்டிங்கும் செய்வார், பந்துவீச்சிலும் அசத்துவார். சிஎஸ்கே அணியால் ரூ. 10 கோடிக்குள் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரை வாங்க முடியும். இருவருமே சிவம் துபே-வுக்கு கீழே உள்ள இடத்தை நிரப்புவர். 

ரவீந்திர ஜடேஜாவின் இடத்டதை இவர்களால் நிரப்ப முடியும். மேலும், ஆஸ்திரேலியா இளம் வீரர் கூப்பர் கானலியையும் 2 முதல் 3  கோடிக்கு வாங்கலாம் என கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். பிரேஸ்வெல் 2023 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: முன்னாள் CSK வீரருக்கு பெரிய ஆப்பு... ஐபிஎல் ஏலத்தில் அப்போ ஏலம் போக மாட்டாரா...!?

மேலும் படிக்க: கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News