மெஸ்ஸியின் இந்தியா GOAT டூர் சுற்றுப்பயணம்: முழு அட்டவணை! டிக்கெட் விலை, எப்படி வாங்குவது?

Lionel Messi GOAT India Tour: லியோனல் மெஸ்ஸி மூன்று நாட்கள் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதன் முழு அட்டவனை, டிக்கெட் விலை மற்றும் அதனை எப்படி வாங்குவது உள்ளிட்ட விவரங்கள் இங்கே.    

Written by - R Balaji | Last Updated : Dec 12, 2025, 01:10 PM IST
  • மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம்
  • முழு அட்டவணை, டிக்கெட் விலை, எப்படி வாங்குவது?
  • முழு விவரம் இங்கே
மெஸ்ஸியின் இந்தியா GOAT டூர் சுற்றுப்பயணம்: முழு அட்டவணை! டிக்கெட் விலை, எப்படி வாங்குவது?

உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மூன்று நாட்கள் சிறப்பு சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.  GOAT டூர் என அழைக்கப்படும் இந்த நிகழ்வு நாளை டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறும். இது மெஸ்ஸியின் இந்தியாவின் இரண்டாவது வருகை என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source

Lionel Messi: மெஸ்ஸியின் GOAT டூர் பயணம் 

மியாமி நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மெஸ்ஸி துபாயில் சிறிது ஓய்வெடுத்த பின் நாளை டிசம்பர் 13 அதிகாலை 1:30 மணிக்கு கொல்கத்தாவை வந்தடைகிறார். அங்கு காலை 9:30 மணி முதல் ரசிகர்களை சந்தித்து, 10:30 மணி வரை உருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். 11:15 மணிக்கு யுவா பாரதி மைதானத்திற்கு சென்று நடிகர் ஷாரூக் கான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சௌரவ் கங்குலி ஆகியோருடன் சந்திப்பார். நண்பகல் 12 மணி முதல் நட்புப் போட்டி, பாராட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத் பயணிக்கிறார்.

Lionel Messi In Hyderabad: ஹைதராபாத் செல்லும் மெஸ்ஸி 

ஹைதராபாத்தில் மாலை 7 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் 7 பேர் கொண்ட கால்பந்துப் போட்டியில் விளையாடுகிறார். அப்போது இசை நிகழ்ச்சியும் நடைபெறும். அடுத்த நாள் மும்பையில் பிற்பகல் 3:30 மணிக்கு கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் பேடல் கோப்பை, பிரபலங்கள் கால்பந்துப் போட்டி, வான்கடே மைதான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  தொண்டு நோக்கமான ஃபேஷன் ஷோ, 2022 உலகக் கோப்பை நினைவுப் பொருட்கள் ஏலம், லூயிஸ் சுவாரெஸ் உடன் ஸ்பானிஷ் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அங்கு இடம்பெறும்.

PM Narendra Modi & Lionel Messi: பிரதமர் மோடியுடன் சந்திப்பு 

டிசம்பர் 15 அன்று புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுற்றுப்பயணத்தை முடிக்கிறார். மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா சகவீரர் லூயிஸ் சுவாரெஸ், FIFA உலகக் கோப்பை வென்ற ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

How to buy Messi GOAT India tour tickets: டிக்கெட் பெறுவது எப்படி? வுலை எவ்வளவு? 

டிக்கெட்டுகள் 'டிஸ்ட்ரிக்ட்' ஆப் மூலம் விற்பனையில் உள்ளன. ஆரம்ப விலை ₹4,500; மும்பையில் ₹8,250 முதல் தொடங்குகிறது. 2011ல் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அர்ஜென்டினாவுக்காக வெனிசுலாவுடன் நட்புப் போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, அங்கு வெற்றிக்கு உதவிய கோல் அடித்திருந்தார்.

மேலும் படிக்க: IND vs SA டி20: கம்பீர் செய்த பெரிய தப்பு.. இந்த ஃபினிஷரை கண்டிப்பா எடுத்திருக்கனும்!

மேலும் படிக்க: தொடர்ந்து சொதப்பும் கில்.. கம்பீர் இருக்கிற வர சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பே கிடைக்காதா? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News