LIVE IND vs PAK: இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி

வரலாற்றை மாற்றியது இளம் பாகிஸ்தான் அணி!! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 24, 2021, 11:07 PM IST
Live Blog

India vs Pakistan Live Updates: கிரிக்கெட்டை பொறுத்தவரை பல முக்கிய போட்டிகள் இருந்தாலும், ரசிகர்களின் அதிகம் கவனம் பெறுவது என்பது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியாக தான் இருக்கிறது.  ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தமுறை எப்படியாவது இந்திய அணி வீழ்த்தி விட வேண்டும் என முனைப்பில் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது. ஆனால் டி20 உலகக்கோப்பையின் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இதுவரை பாகிஸ்தான் வெல்லவில்லை.

இன்றைய போட்டியில் ஆறாவது முறையாக இந்திய அணி வெல்லுமா? அல்லது முதல் முறையாக பாகிஸ்தான் அணி வெல்லுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இன்றைய போட்டி நடக்கும் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால், டாஸ் வெல்லும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

24 October, 2021

  • 23:00 PM

    பாகிஸ்தான் அதிரடி வெற்றி...

    வரலாற்றை மாற்றியது இளம் பாகிஸ்தான் அணி!! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து பல நாட்களாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கனவாகவே இருந்த விஷயத்தை நிஜமாக்கியது!!

     

  • 22:15 PM

    இந்திய பவுலர்களை பந்தாடும் பாகிஸ்தான்

    ஸ்கோர்: 15 ஓவர்களில் பாகிஸ்தான் 121/0

    முகமது ரிஸ்வான் - 56

    பாபர் ஆஸம் -  62

  • 22:15 PM

    பாகிஸ்தானுக்கு இலக்கு:  10 ஓவரில் 81 ரன்கள்

    10 ஆவது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 71/0 ரன்கள்

    முகமது ரிஸ்வான் - 35

    பாபர் ஆஸம் -  34

  • 21:45 PM

    வெற்றி பெற 90 பந்துகளில் 117 ரன்கள் தேவை:

    #LIVEUpdate

    5வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 35/0 ரன்கள்

    முகமது ரிஸ்வான் *21

    பாபர் ஆஸம்* 14

  • 21:30 PM

    8வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 52/0 ரன்கள்

    முகமது ரிஸ்வான் - 30

    பாபர் ஆஸம் -  20

  • 21:15 PM

    இந்தியா பேட்டிங்: Ind: 151/7 

    இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.  

     

  • 21:00 PM

    கேப்டன் கோலி ஆட்டமிழந்தார்

    நிதானமாக ஆடிக்கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் பவுலர் அப்ரிடியின் அபாரமான பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

  • 21:00 PM

    ஜடேஜா அவுட்

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்... பந்துவீச்சில் அசத்துவாரா?

  • 21:00 PM

    விராட் கோலி அரை சதம்

    பாகிஸ்தான் பந்து வீச்சில் இந்தியா தள்ளாடிய நிலையில், நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்திய கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்தார்

  • 20:45 PM

    15 ஓவர்களுக்குப் பிறகு

    15 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 37 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 6 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். 

  • 20:30 PM

    இந்தியாவின் மற்றொரு விக்கெட் விழுந்தது..

    ரிஷப் பந்த் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து 39 ரன்களில் அவுட் ஆனார். 

  • 20:15 PM

    10 ஓவர்களுக்குப் பிறகு

    10 ஓவர்கள் போடப்பட்ட நிலையில், இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 26 ரன்களுடனும் ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். 

  • 20:00 PM

    பவர் பிளேவுக்கு பிறகு...

    பவர் பிளே முடிந்த நிலையில், இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 20 ரன்களுடனும் ரிஷப் பந்த் 1 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். 

  • 19:45 PM

    சூர்யகுமார் அவுட்...

    அசால்டாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். அசன் அலி போட்ட பந்தை விக்கெட் கீப்பர் ரிஸ்வான் லாவகமாக பிடித்தார். இது அவரது 100 ஆவது கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 19:45 PM

    இந்தியாவுக்கு அடுத்த அடி...

    இந்துயாவின் மற்றொரு துவக்க அட்டக்காரரான கெ.எல். ராகுலும் பெவிலியன் திரும்பினார். ரசிகர்களுக்கு ஷாக்!!

  • 19:30 PM

    ரோஹித் ஷர்மா அவுட் 

    இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி... ஹிட் மேன் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்!!

  • 19:30 PM

    அஸ்வின், இஷான் கிசன் வெளியே:
    இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ராகுல் சாஹர், இஷான் கிஷன், அஸ்வின் மற்றும் தாக்கூர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை.

  • 19:00 PM

    டாஸ் வென்றது பாகிஸ்தான்:

    இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.

     

  • 19:00 PM

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்:

    "தல தோனியும் கிங் கோலியும் இருக்க கவலை எதுக்கு?

    பக்காவா பிளான் பண்ணி பாகிஸ்தான தூக்கறோம்!!"

  • 19:00 PM

    பார்க்க வீடியோ:
    இந்தியாவுக்கு எதிரான போட்டி - பாகிஸ்தான் வீரர்கள் என்ன சொன்னார்கள்? 

     

     

  • 18:45 PM

    இரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இரு அணிகளின் ரசிகர்களும் துபாய் சர்வதேச மைதானத்தை அடைந்துள்ளனர். இந்த மிகப்பெரிய போட்டியின் மீது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் உள்ளது.

  • 18:30 PM

    இறுதிப் போட்டியின் இறுதி ஓவர் -நினைவிருக்கிறதா?
    2007 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரின் வீடியோ காட்சிகள்.

     

  • 18:30 PM

    தொடங்கியது பயணம்: 
    டி20 உலகக்கோப்பை 2021 தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க இந்திய அணி ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு செல்கிறது.

     

  • 18:00 PM

    பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும்:
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் கொஞ்சம் சாதகமாக இருக்கும். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கவும் ரன் கட்டுப்படுத்தவும் சாதகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 17:45 PM

    போட்டியை எங்கு காணலாம்:
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி 3 ஆகிய சேனல்களில் போட்டி  ஒளிபரப்பப்படும்.

  • 17:15 PM

    பாகிஸ்தான் ரசிகையின் அன்பு கட்டளை: 
    ராகுலை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விலையாட வேண்டாம் எனக் கேட்ட அதே பெண், எம்எஸ் தோனியிடம், "மஹி இந்த போட்டியை (IND vs PAK) விட்டுவிடுங்க ... அடுத்த போட்டியில் வழிகாட்டியாக இருங்கள்... தயவுசெய்து இந்த போட்டி வேண்டாம்" எனக் கூறினார். 

    வீடியோ பார்க்க: 

     

     

Trending News