IND vs NZ, ICC Champions Trophy Final Live News Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025 Final) இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி 3வது முறையாகவும், நியூசிலாந்து அணி 2வது முறையாகவும் சாம்பியன்ஸ் டிராபி வெல்ல முனைப்பு காட்டுவார்கள் (IND vs NZ Live Score Updates).
2025 நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் (Budget Session 2025 Second Phase) நாளை (மார்ச் 10) நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. நாடாளுன்ற தொகுதிகள் மறுவரையறை, புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பது, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ள இந்த கூட்டம் நடைபெறுகிறது (DMK MPs Meeting).
சென்னையில் எழும்பூர் முதல் கடற்கரை இடையே 4ம் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கலப்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வரை இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளும், தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படுகிறது (Chennai Sub Urban Train Service Cancelled).
அந்த வகையில், உள்ளூர் முதல் உலகளவிலான இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்களையும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி குறித்த முக்கிய அப்டேட்களையும் இங்கு காணலாம்.










