கே.எல். ராகுலை போல ரிஷப் பண்ட்டை திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

Sanjiv Goenka heated conversation: ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் லக்னோ அணி தோல்வி அடைந்தது பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் ரிஷப் பண்டுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - R Balaji | Last Updated : Mar 25, 2025, 04:26 PM IST
  • நேற்று (மார்ச் 24) நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் லக்னோ அணி தோல்வி அடைந்தது
  • போட்டி முடிந்தவுடன் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்ட்டுடன் பேசினார்
  • பின்னர் டிரஸ்ஸிங் ரூமிக்கு சென்று வீரர்களுடன் பேசும் வீடியோ வைரலாகிறது
கே.எல். ராகுலை போல ரிஷப் பண்ட்டை திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்படியான மோசமான தோல்வியை லக்னோ அணி தழுவிய நிலையில், அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த கே. எல். ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மைதானத்திலேயே கடுமையாக சாடினார். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதனால் வருத்தமடைந்த கே.எல்.ராகுல் அந்த அணியை விட்டு வெளியேறினார். பின்னர் கடந்த டிசம்பரில் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 

Add Zee News as a Preferred Source

கே.எல்.ராகுலின் இடத்தை நிரப்ப லக்னோ அணி வீரர்களை தேடிய நிலையில், ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியதால், மற்ற நல்ல பந்து வீச்சாளர்களை லக்னோ அணியால் வாங்க முடியவில்லை. இச்சூழலில், நேற்று (மார்ச் 24) டெல்லி அணிக்கு எதிரான  போட்டியில் லக்னோ அணி  முதலில் பேட்டிங் செய்து 209 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த நிலையில்தான், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கே. எல். ராகுலை சாடியது போல ரிஷப் பண்ட்டை சஞ்சீவ் கோயங்கா சாடுகிறாரா? என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ டிரண்ட் ஆகி வருகிறது. 

மேலும் படிங்க: GT vs PBKS: பலம் வாய்ந்த இரு அணிகள்.. வெல்லப்போவது யார்? பிளேயிங் 11 என்ன?

அடுத்தப்போட்டியில் வெற்றி பெறுவோம்

இச்சூழலில் போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் பேசி இருக்கிறார். அப்போது, இன்றைய போட்டி ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் சில நல்ல விஷயங்களும் நடத்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். 

பந்து வீசும்போதும் சரி பேட்டிங்கின் போதும் சரி, இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நமது அணி இளம் வீரர்களை கொண்ட அணி. எனவே நல்ல விஷ்யங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்தப்போட்டிக்கு தயாராவோம். அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்ப்போம் என வீரர்களுடன் உறையாடினார் சஞ்சீவ் கோயங்கா. 

LSG vs SRH 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியை தழுவினாலும், அவர்களிடம் உள்ள பந்து வீச்சை வைத்து இவ்வளவு தூரம் போராடி உள்ளனர். அவர்களிடம் உள்ள முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். சரியான வேகப்பந்து வீச்சு அந்த அணியிடம் இல்லை. முதல் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தப்போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அந்த அணியை எதிர்கொள்ள வேண்டும் என்றால், ஒரு நல்ல திட்டமிடல் தேவை. என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: ஆர்சிபியை போட்டுத்தாக்க... சிஎஸ்கே செய்ய வேண்டிய பிளேயிங் XI மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News