ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஏப்ரல் 06) ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டு அணிகளுமே 4 போட்டிகள் விளையாடி தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5வது இடத்திலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6வது இடத்திலும் உள்ளன. எனவே இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளுமே களத்தில் இறங்கும்.
லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ், பூரான், மார்க்ரம் ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருக்கின்றனர். பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் மற்றும் திக்வேஷ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அதேசமயம் கொல்கத்தா அணியில் டி காக், ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருக்கின்றனர். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் பலமாக இருக்கின்றனர். சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேரம், மைதானம் மற்றும் ஸ்டிரிமிங்
மைதானம்: ஈடன் கார்டன், கொல்கத்தா
நேரம்: மாலை 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு போட்டி தொடங்கும்
ஸ்டிரிமிங்: ஜியோ ஹாட்ஸ்டார்
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக்/ரஹ்மானுல்லா குர்பாஸ் (விகீ), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் & விகீ), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய்.
மேலும் படிங்க: பஞ்சாப் போட்டியில் தோனி விளையாட மாட்டார்... வந்தது Exclusive தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









