மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16ல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இருந்து மும்பை ஸ்டார் வீரர் ரோகித் சர்மா விலகுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் விலகும் காரணம் என்ன? அவருக்கு பதில் விளையாடப்போவது யார் என்ற விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஏப்ரல் 16) வியாழக்கிழமை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், இப்போட்டியில் இருந்து மும்பை அணி நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா காணப்படவில்லை. இதன் காரணமாக அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, ரோகித் சர்மாவுக்கு தொடைதசைப் பகுதியில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை குவித்தது. இதையடுத்து 241 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்த களமிறங்கியது. அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 13 பந்துகளில் 19 ரன்களை எடுத்த நிலையில், 6வது ஓவரின் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார்.
கிரிக்பஸின் அறிக்கையின்படி, போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மாவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவரின் த்சைநார் கிழிவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில், ரோகித் சர்மா ஐபிஎல்லில் அதிக போட்டிகளை தவறவிட வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆனால், ஏற்பட்ட காயத்தை மேலும் பெரிதாக்க விரும்பாமல் அவருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரோகித் சர்மா ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் இது தொடர்பான முடிவை அவரே எடுப்பார் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் ஒருவேளை ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக குயிண்டன் டி காக் விளையாட வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றால், ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட வைக்க வாய்ப்புள்ளது. இதுவரை உள்ள போட்டிகளில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ததுடன் ஃபில்டிங்கும் செய்து வந்தார், இம்பேக்ட் வீரராக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6000 ரன்களை நிறைவு செய்தார். இதுவரை அந்த அணிக்காக 231 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 29.76 சராசரி மற்றும் 132.82 ஸ்டிரைக் ரேட்டுடன் 6013 ரன்களை எடுத்துள்ளார். இதில் 40 அரை சதங்கள் மற்றும் 2 சதங்களும் அடங்கும்.
நடப்பாண்டு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி கடுமை சரிவை கண்டு வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றியை பெற்றதற்கு பின்னர் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்த போட்டியில் தொடர்ந்து தோல்விகளை தழுவினர். இதன் காரணமாக -0.772 என்ற மோசமான நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஏப்ரல் 16) ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் அவர்கள் விளையாடிய மூன்றிலுமே வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழை காரனமாக ரத்தானது. இப்போட்டியில் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த சூழலில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்ததுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: குயிண்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஏஎம் கசன்பர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இம்பேக்ட் வீரர்: ரோகித் சர்மா, ராபின் மின்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இம்பேக்ட் வீரர்: நேஹல் வதேரா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!