MI vs SRH : சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த பலே அதிர்ஷ்டம், மும்பை அணி விரக்தி

MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு பல அதிர்ஷ்டங்கள் கிடைத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுக்க முடிந்தது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 17, 2025, 10:02 PM IST
  • ஐபிஎல் இன்றைய போட்டி
  • மும்பை இந்தியன்ஸ் அணி விரக்தி
  • சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
MI vs SRH : சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த பலே அதிர்ஷ்டம், மும்பை அணி விரக்தி

MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இதன்படி, சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஓப்பனிங் இறங்கினர். இருவரும் செம பார்மில் இருப்பதால், சன்ரைசர்ஸ் அணி சரவெடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறத்தொடங்கினர். அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு பந்துகள் சரியாக பேட்டில் படவே இல்லை. அந்தளவுக்கு மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் துல்லியமான லைன் மற்றும் லென்தில்  பந்துகளை வீசினர்.

Add Zee News as a Preferred Source

இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சுகளை வில் ஜாக்ஸ், கரண் சர்மா தவறவிட்டனர். அடுத்தடுத்து இவருக்கும் கேட்சுகளை மும்பை பீல்டர்கள் விட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார் அபிஷேக் சர்மா. ஆனால், அதுவும் ரிப்ளேவில் நோபால் என தெரியவந்தது. இத்தனை அதிர்ஷ்டங்களால் மும்பை பிளேயர்களே விரக்தி அடைந்தனர். அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிர்ஷ்டம் தேடிவந்தபோதும், மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் சன்ரைசர்ஸ் அணியால் ஒரு சிக்சர்கூட அடிக்க முடியவில்லை. 18வது ஓவரிலேயே சன்ரசைர்ஸ் அணிக்கு முதல் சிக்சர் கிடைத்தது.

அப்படியென்றால் மும்பை அணி எந்தளவுக்கு துல்லியமாக பந்துவீசியிருக்கும் என நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இத்தனைக்கும் மும்பை அணியின் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா காயம் காரணமாக ஒரு பந்துகூட வீசவில்லை. அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸ் பந்துவீசி அமர்களப்படுத்தினார். அபிஷேக் 10, டிராவிஸ் ஹெட் 28, கிளாசன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அன்கித் வெர்மா 8 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் ஆட்டத்தை தொடர்ந்தது. பேட்டிங் பிட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை பிட்ச் வழக்கத்துக்கு மாறாக பந்துவீச்சுக்கு உகந்ததாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்க மிகவும் கஷ்டப்பட்டனர். மும்பை அணியில் ஓப்பனிங் இறங்கிய ரோகித் சர்மா மட்டும் 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். ஆனால் அவரும் அதிகநேரம் இல்லாமல் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

மேலும் படிக்க | IPL: அஸ்வினுக்கு அடுத்து நீக்கப்படப்போகும் இந்த 2 பேர்... CSK-வின் சரவெடி பேட்டிங் ஆர்டர்

மேலும் படிக்க | சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவுக்கு ஆப்பு? இது அவசியம்.. என்ன செய்யப்போகிறார் தோனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News