இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் - மைக்கேல் அதர்டன்!

India vs Pakistan Match: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இனி இப்படி நடத்த வேண்டாம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Oct 6, 2025, 06:55 PM IST
இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் - மைக்கேல் அதர்டன்!

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் விளையாட முறன்பட்டு வருகின்றனர். லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்தியா அவர்களுடன் விளையாட மறுத்தது. அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாட மறுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. 

Add Zee News as a Preferred Source

ஆனால் போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர்கள் கைக்குலுக்காமல் சென்றனர். இதையடுத்து இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனான நிலையில், ஆசிய கவுன்சில் தலைவர் நக்வி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இந்திய அணியின் மீது விமர்சனக்களை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் மத்தியில் ஒரு திருவிழாவாக பார்க்கப்பட்டாலும், அதன் பின்னால், ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்படுகிறது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதர்டன் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் எழுதி உள்ள தனது கட்டுரையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரை மதிப்பை கொண்டது. அதனால் ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமம் சுமார் 3 பில்லின் டாலர் வரை விற்கப்படுகிறது. எனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருமானத்திற்கு மிகவும் அவசியமாகிறது. 

ஐசிசி தொடர்களில் பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெவ்வேறு குழுவில் இடம்பெறவே இல்லை. ஒரே குழுவில் இடம் பெற்றுதான் வருகிறது. தொடரில் குறந்தபட்சம் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டியாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காகவே குழுக்கள் இப்படி அமைக்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுக்கு ஒரு பாலமாக இருந்தது. ஆனால் தற்போது அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்களுக்கும் அரசியலுக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது என்று அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும், ஒரு விளையாட்டு அதன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப போட்டி அட்டவணையை ஏற்பாடு செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இப்போது போட்டி வேறு வழிகளில் சுரண்டப்படுவதால், அதற்கு இன்னும் குறைவான நியாயமும் இல்லை. அடுத்த ஒளிபரப்பு உரிமைச் சுழற்சிக்கு, ஐசிசி நிகழ்வுகளுக்கு முன் போட்டிப் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். மேலும் இரு அணிகளும் ஒவ்வொரு முறையும் சந்திக்கவில்லை என்றால், அது அப்படியே இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: இதை செய்தால் மட்டுமே.. ரோகித், கோலியை எச்சரித்த முன்னாள் வீரர்!

மேலும் படிக்க: கில்தான் அடுத்த கேப்டன்.. 13 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ரோகித் சர்மா.. வைரலாகும் பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News