Mohammad Kaif Prediction: டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் இரண்டு முறை 300 ரன்களை எடுத்து சாதனை படைத்திருக்கிறார். அதிரடியான பேட்டிங்கை கொண்ட சேவாக் பல சாதனைகளை இந்திய அணிக்காக செய்திக்கிறார். அதில் முக்கியமானது என்றால் அவர் நிகழ்த்திய முச்சதத்தை கூறலாம். அவர் கடந்த 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக முச்சதத்தை பதிவு செய்தார். அதன் பின்னர் மீண்டும் 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய டெஸ்ட் வரலாற்றில் இரண்டு முறை முச்சதம் அடித்த ஒரே வீரராக வீரேந்தர் சேவாக் உள்ளார். சேவாக்கிற்கு பின் கருண் நாயர் 300 ரன்களை ஒரு முறை அடித்து அவருக்கு அடுத்தப்படியாக உள்ளார். இந்த நிலையில், வீரேந்தர் சேவாக்கின் 300 ரன்கள் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடிப்பார் என முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய சதங்களை அடித்து புதிய மதிப்பெண்களைப் பெற பொறுமை கொண்ட ஒரு பேட்ஸ்மேன். அவரது முதல் 26 போட்டிகளில், அவரது எண்ணிக்கை சச்சின் மற்றும் விராட் ஆகியோரைப் போலவே சிறந்தது. அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்த அவரது சதங்கள் பெரும்பாலும் இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றன. சேவாக்கின் 300 ரன்கள் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் மட்டுமே முறியடிப்பார். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் மூலம் ஜெய்ஸ்வாலை பாராட்டிய முகமது கைஃப், அவர் மட்டுமே சேவாக்கின் 300 ரன்கள் சாதனையை முறியடிப்பார் என கணித்திருக்கிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2420 ரன்கள் குவித்து உள்ளார். இது 7 சதம் மற்றும் 12 அரை சதங்கள் அடங்கும். ஒருமுறை இரட்டை சதமும் விளாசி இருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி பல சாதனைகளை படைத்து வருகிறார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் 20 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் ஜெய்ஸ்வால் ஆவார். சுனில் கவாஸ்கருக்குப் பிறகு, 22 வயதில் ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் இவர்தான்.இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக மாறி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









