இந்தூரில் நடைப்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குவித்த விக்கெட்டுகள் அவரை ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு சென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறித்த போட்டியில் ஷமியின் பந்துவீச்சு அவருக்கு 27-க்கு 3 மற்றும் 31-க்கு 4 என புள்ளிவிவரங்களை அளித்த நிலையில், ICC டெஸ்ட்  தர வரிசை பட்டியலில் 8 இடங்கள் அவருக்கு முன்னேற்றம் கிடைத்தது. 790 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இந்திய வேகப்பந்து தற்போது 7-வது இடத்தில் உள்ளார். இதுமட்டும் அல்லாது கபில் தேவ் (877) மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (832) அடுத்து மூன்றாவது சிறந்த மதிப்பீட்டு புள்ளியை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் அவர் பெற்றார்.


இதற்கிடையில், மயங்க் அகர்வால் ஒரு இன்னிங்சில் 243 ரன்கள் குவித்து 11-வது இடத்தை எட்டியுள்ளார். 28 வயதான அவர் தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 858 ரன்கள் எடுத்த, 691 மதிப்பீட்டு புள்ளிகளை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கிரிக்கெட் வரலாற்றில்., முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் அவரை விட ஏழு வீரர்கள் மட்டுமே அதிக ரன்கள் எடுத்துள்ளனர் - டான் பிராட்மேன் (1210), எவர்டன் வீக்ஸ் (968), சுனில் கவாஸ்கர் (938), மார்க் டெய்லர் (906), ஜார்ஜ் ஹெட்லி (904), பிராங்க் வொரெல் (890) மற்றும் ஹெர்பர்ட் சுட்க்ளிப் (872). தற்போது இப்பட்டியலில் 858 ரன்களுடன் 8-வது இடம் பிடித்துள்ளார் மயங்க் அகர்வால்.


வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. என்றபோதிலும் இப்போட்டி இந்திய அணி வீரர்கள் உள்பட வங்கதேச அணி வீரர்களுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்று தந்துள்ளது.


இந்தியாவுக்கான மற்ற குறிப்பிடத்தக்க இயக்கங்களில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நான்கு இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை எட்டியுள்ளார், வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா (20) மற்றும் உமேஷ் யாதவ் (22-வது) தலா ஒரு ஸ்லாட்டை உயர்த்தியுள்ளார்.


இதற்கிடையில், ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் முதல் 10 பத்து இடங்களில் தனது இருப்பினை நீடித்து வருகின்றார். அதே நேரத்தில் ஆல்ரவுண்டர்களில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


வங்கதேச அணியை பொறுத்தவரை, முஷ்பிகுர் ரஹீமின் 43 மற்றும் 64 ரன்கள்  ஐந்து இடங்கள் முன்னேற்றி, 30-வது இடத்தை அடைய உதவியது. அதே நேரத்தில் லிட்டன் தாஸ் 92-வது இடத்திலிருந்து 86-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


பந்துவீச்சாளர்களில், இந்தூரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் அபு ஜெயத், ஆறு டெஸ்ட்களுக்குப் பிறகு 62-வது இடத்தை பெற 18 இடங்களை முன்னேற்றியுள்ளார்.